நடிகர் சூர்யாவுக்கு சமீபகாலமாக பெரிதாக படங்கள் எதுவும் ஓடவில்லை. எதிர்பார்த்த படங்கள் சில, மிக மோசமான தோல்வியை தழுவின. குறிப்பாக என்ஜிகே, எதற்கும் துணிந்தவன், தானா சேர்ந்த கூட்டம், காப்பான் போன்ற படங்கள் சூர்யாவுக்கு கை கொடுக்கவில்லை. சூரரைப் போற்று, ஜெய்பீம் என 2 படங்கள் மட்டுமே சூர்யாவுக்கு பெயர் சொல்லியது.
இந்நிலையில் அவர் நடிக்க வேண்டிய சில முக்கிய படங்களையும் தவற விட்டுவிட்டார். குறிப்பாக டைரக்டர் பாலாவின் வணங்கான் படத்தில் சூர்யா நடித்திருந்தால், அது அவருக்கு வேற லெவலில் ஒரு வரவேற்பை பெற்றுத் தந்திருக்கும். அதே போல் சுதா கொங்கரா இயக்கத்தில் புறநானூறு படத்திலும் நடிக்கும் வாய்ப்பை அவரே கெடுத்துக்கொண்டார்.
இதற்கிடையே சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளிவர உள்ள கங்குவா படத்தை தான் சூர்யா பெரிய அளவில் எதிர்பார்த்து இருக்கிறார். இந்த படத்தை 2 பாகங்களாக வெளியிடவும் திட்டமிட்டுள்ளனனர். தமிழ் சினிமாவில் இப்போது இரண்டாம் பாகம் படம் வெளியிடுவது என்பது ஒரு பேஷனாக மாறிவிட்டது.
பொன்னியின் செல்வன், பாகுபலி போன்ற படங்களின் கதைப்படி அதை ஒரு படமாக தர முடியாத அளவுக்கு நிறைய விஷயங்கள் இருந்ததால், இரண்டு பாகங்களாக தந்தனர். ஆனால் ஒரே படமாக தர வேண்டிய படத்தை இரண்டு பாகங்களாக நீட்டி முழக்கி, தேவையற்ற பகுதிகளை படத்தில் சேர்த்தால் அது, படம் பார்க்கும் ரசிகர்களுக்கு சுவாரசியத்தை கெடுத்து விடும்.
அந்த வகையில் கங்குவா 2ம் பாகம் பெரிய ஏமாற்றத்தை தந்துவிடக் கூடாது என்பதற்காக இந்த 2ம் பாகத்தில், நடிகர் கார்த்தியை வில்லனாக நடிக்க வைத்துள்ளனர். இரண்டாம் பாகம் முழுவதும் வில்லனாக கார்த்தியும், ஹீரோவாக சூர்யாவும் நடித்திருப்பது இதுவே முதல்முறை. அதுவும் அண்ணன், தம்பி இருவரும் ஹீரோ, வில்லன் என நடிப்பது ரசிகர்களுக்கு டபுள் ஆச்சரியம்தான்.
இந்த விஷயத்தை நடிகர் சிவக்குமார் தெரிந்திருந்தால், சம்மதித்திருப்பாரா என்று தெரியவில்லை. ஏனென்றால் நடிகர் கார்த்தியும் ஒரு முன்னணி ஹீரோ நடிகராக இருப்பவர். இப்படி வில்லனாக நடிப்பது அவரது சினிமா கேரியரை பாதிக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதே நேரத்தில், விக்ரம் ரோலக்ஸ் போல, கங்குவா முதல் பாகத்திலேயே இறுதியில் கார்த்தியை காட்டி, ரசிகர்களை கவரவும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.





