- Advertisement -
Homeபொழுதுபோக்குஅடுத்ததாக ரெடியாகும் ஹாரர் படத்தின் நான்காம் பாகம்... ஏற்கனவே கடைசி 2 பாகங்கள் தோல்வி ஆனப்போ...

அடுத்ததாக ரெடியாகும் ஹாரர் படத்தின் நான்காம் பாகம்… ஏற்கனவே கடைசி 2 பாகங்கள் தோல்வி ஆனப்போ எதுக்குப்பா இது… ரசிகர்கள் கேள்வி…

- Advertisement -

நாளைய இயக்குனர் நிகழ்ச்சியின் மூலம் குறும்படங்களை இயக்கி அதன் மூலம் வெள்ளி திரைக்கு வந்தவர் கார்த்திக் சுப்புராஜ். அந்த நிகழ்ச்சியிலேயே தன்னை திறமைமிக்க இயக்குனர் என்பதை நிரூபித்து விட்டார் கார்த்திக் சுப்புராஜ். போட்டியின் போது அவர் எடுத்திருந்த ஒரு குறும்படம், இயக்குனர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற, இதனையே வெள்ளித்திரையில் பெரிய திரைப்படமாக எடுக்கலாமே என பலர் யோசனை கூறினர்.

இதை மனதில் வைத்துக் கொண்டு கார்த்திக் சுப்புராஜ் எடுத்த முதல் திரைப்படம் தான் பீட்சா. ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்துக்கொண்டு ஹீரோவாக மாற வேண்டும் என்ற முனைப்பிலிருந்த விஜய் சேதுபதிக்கு அதுதான் கதாநாயகனாக பேர் சொல்லும் திரைப்படமாக அமைந்தது. இதில் ரம்யா நம்பீசன் கதாநாயகியாக நடித்திருந்தார்.

தமிழ் சினிமாவிற்கு பீட்சா திரைப்படம், மிக வித்தியாசமான களம் என்று கூறலாம். ஹாரர் திரைப்படமாகவே அது எடுக்கப்பட்டிருந்தாலும், அந்தத் திரைப்படம் கூறிய விதம் ரசிகர்களின் மிகப்பெரிய அளவில் கவர்ந்தது. காட்சிக்கு காட்சி பயமுறுத்திய கார்த்திக் சுப்புராஜ், கடைசியில் அனைத்தையும் புஸ்வானம் ஆக்கிய யுக்தியை திரையரங்குகளில் பலரும் கைதட்டி ரசித்தனர்.

அந்த கிளைமேக்ஸ் ட்விஸ்டை யாருமே எதிர்பார்க்காததால், பீட்சா திரைப்படம் திரையிடப்பட்ட இடங்களில் எல்லாம் வசூல் மழை குவித்தது. மெதுவாக ரீச் ஆகிய அந்த திரைப்படம், கூடுதல் திரையரங்குகளை பெற விஜய் சேதுபதிக்கு நல்ல பெயரை பெற்று கொடுத்தது. அதில் நடித்த ரம்யா நம்பீசனும், கிளைமாக்ஸ் வரை நம்மை பெரிதளவில் கவர்ந்திருப்பார்.

இந்த திரைப்படத்திற்கு பிறகு, பீட்சா படத்தின் இரண்டாம் பாகம் தயாரானது. த வில்லா என பெயரிடப்பட்ட அந்தத் திரைப்படத்தை ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் எதிர்பார்த்தனர். முந்தைய பாகம் கொடுத்த தாக்கத்தால் பீட்சா 2 ரிலீஸ் ஆவதற்கு முன்பே பேசப்பட்டது. ஆனால், அந்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

இப்படியான சூழலில் பீட்சா படத்தின் மூன்றாம் பாகம் சமீபத்தில் வெளியானது. இந்த திரைப்படம் திரையரங்களில் ரிலீஸ் ஆனது பாதி பேருக்கு தெரியாது என்று கூறலாம். அந்த அளவுக்கு அதன் பிரமோஷன் பணிகள் வீக்காக இருந்தன. இந்நிலையில் பீட்சா படத்தின் நான்காம் பாகத்தை எடுக்க தயாரிப்பாளர் சி வி குமார் திட்டமிட்டு இருக்கிறார். சூது கவ்வும் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்துக் கொண்டிருக்கும் இயக்குனர் தான் இதை இயக்கப் போகிறாராம்.இதில் நடிகர் நாசரின் மகன் அபிஹாசன் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே கடைசி இரண்டு பாகங்கள் வந்ததும் போனதும் தெரியாமல் இருந்த நிலையில் எதற்கு இந்த நான்காம் பாகம் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

சற்று முன்