- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய் 68 படத்தின் கோட் டைட்டிலை பங்கம் செய்த ப்ளு சட்டை மாறன் - படம்...

விஜய் 68 படத்தின் கோட் டைட்டிலை பங்கம் செய்த ப்ளு சட்டை மாறன் – படம் வந்தா பார்த்துட்டு வந்து பேசுங்க என விஜய் ரசிகர்கள் பதிலடி

- Advertisement -

நடிகர் விஜய் நடிப்பில் லியோ படம் வெளியானது. அந்த படத்தை தொடர்ந்து வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் இப்போது நடித்து வருகிறது. விஜய் 68 எனக் கூறப்பட்ட அந்த படத்துக்கு கோட் என பெயரிடப்பட்டுள்ளது. நேற்று மாலை இந்த அப்டேட் வெளியானது.

கடந்த பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் கதைகளுக்கு தான் பஞ்சம் என்றால் டைட்டிலுக்கும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. அதனால் விலங்குகள் பெயர்களை படத்தின் டைட்டில்களாக வைத்து வருகின்றனர். இது சினிமா ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது.

- Advertisement -

உதாரணமாக சிங்கம், புலி, கழுகு, பைரவா, சுறா, லியோ, பீஸ்ட், மைனா, கும்கி, குருவி, யானை, நாய்சேகர், பன்னிக்குட்டி, ஈ, எறும்பு, நாயா பேயா, சிலந்தி, நண்டு, கோப்ரா என இப்படியே சொல்லிக்கொண்டு போகலாம்.

அந்த வகையில் இப்போது விஜய் நடிக்கும் வெங்கட்பிரபு இயக்கும் படத்தின் பெயர் கோட். அதாவது (கிரேட்டஸ்ட் ஆப் ஆப் டைம்) எந்த நேரத்திலும் தலைசிறந்தவன் என்பதுதான் இதன் அர்த்தம். அதுதான் GOAT என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

விஜய் படங்களை ஏற்கனவே கடுமையாக விமர்சிக்கும் ப்ளூசட்டை மாறன், விஜய் நடித்த புலி, சுறா, லியோ, பீஸ்ட், பைரவா, குருவி என எதுவுமே ஓடலே, கோட் என்கிற இந்த ஆடு மட்டும் ஓடிவிடுமா, என தனது பதிவில் பயங்கரமாக டைட்டிலை பங்கும் செய்துள்ளார்.

இது விஜய் ரசிகர்களை கொதிப்படைய செய்துள்ளது. படம் ரிலீஸ் ஆகறப்போ வந்து பாருங்க, அப்போ ஆடு ஓடுதா, இல்லையான்னு தெரியும். எங்க தலைவர் படம் வரட்டும். அப்போ படம் பார்த்துட்டு வந்து அப்புறமா பேசுங்க என பயங்கர கோபமாக பதில் பதிவுகளை செய்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்