- Advertisement -
Homeபொழுதுபோக்குரூ. 500 கோடி மட்டுமே இதுவரை வசூல் - சலார் படம் குறித்து விமர்சித்தவர்களுக்கு இயக்குநர்...

ரூ. 500 கோடி மட்டுமே இதுவரை வசூல் – சலார் படம் குறித்து விமர்சித்தவர்களுக்கு இயக்குநர் பிரசாந்த் நீல் சொன்ன அதிரடி பதில்

- Advertisement -

கேஜிஎப் படத்தின் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கிய படம் என்பதால் சலார் படம் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருந்தது. பிரபாஸ், பிருத்விராஜ் என திரை ஜாம்பவான்கள் நடித்த படம் என்பதால் வேற லெவலில் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், உலகளவில் வசூல் இதுவரை 500 கோடி ரூபாயை கூட தாண்டவில்லை.

கடந்த டிசம்பர் 22ம் தேதி வெளியான இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என 5 மொழிகளில் வெளியானது. 150 மில்லியன் பார்வையளர்களை கடந்துள்ள இந்த படத்தை பற்றி பலரும் எதிர்மறையான விமர்சனத்தையே தந்து வருகின்றனர்.

- Advertisement -

நடிகர் சிரஞ்சீவி, காந்தாரா நடிகர் ரிஷப் ஷெட்டி, இயக்குநர் ராஜமவுலி போன்றவர்கள் படத்தை பற்றி சிறப்பாக பாராட்டினாலும் அனைத்து தரப்பு ரசிகர்களாலும் பாராட்டப்படும் ஒரு படமாக சலார் இல்லை என்பதே உண்மை. தமிழகத்தில் பல தியேட்டர்களில் சலார் படத்துக்கு பதிலாக ஆயிரம் பொற்காசுகள், சபாநாயகன் போன்ற சின்ன பட்ஜெட்கள் படங்கள்தான் திரையிடப்படுகின்றன.

இதுகுறித்து சலார் படத்தின் இயக்குநர் பிரசாந்த் நீல் கூறுகையில், சலார் படம் பலருக்கும் பிடித்திருக்கிறது. பலருக்கு பிடிக்கவில்லை. எதிர்மறை, நேர்மறை என இரண்டு விதமான விமர்சனங்களும் சலார் படத்துக்கு இருந்து வருகிறது. சிலர் படத்தை புரிந்துக்கொள்ள கடுமையாக இருப்பதாகவும் கூறியுள்ளனர்.

- Advertisement -

ஆறு மணி நேர சலார் படத்தை நான் மூன்று மணி நேரமாக குறைத்து எடுத்துள்ளேன். இன்னும் பாதி படம் மீதம் இருக்கிறது. அதையும் பார்த்தால்தான், படம் முழுமையாக புரியும். இந்த விமர்சனங்களுக்காக சலார் 2ம் பாகத்தில் எந்த மாற்றங்களையும் நான் செய்யப் போவது இல்லை.

இந்த கதையை இப்படி சொல்வதுதான் எனக்கு பிடிக்கும். அதனால், அப்படி சொல்கிறேன். படம் மக்களுக்கு பிடித்ததால்தான் 500 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இந்த வசூல் பற்றி எனக்கு கவலை இல்லை என்றாலும், அதற்காகவும்தான் படம் எடுக்கிறோம். சில படங்கள் மக்களுக்கு உடனே பிடிக்காது. காலம் கடந்தும் பிடிக்கும் என்று கூறியிருக்கிறார் சலார் பட இயக்குநர் பிரசாந்த் நீல்.

- Advertisement -

சற்று முன்