- Advertisement -
Homeபொழுதுபோக்குஅன்னைக்கு துப்பாக்கி பட டிக்கெட்டிற்காக, ட்விட்டரில் பதிவிட்ட சிவகார்த்திகேயன்... உண்மையிலேயே இது தான்யா வளர்ச்சி...

அன்னைக்கு துப்பாக்கி பட டிக்கெட்டிற்காக, ட்விட்டரில் பதிவிட்ட சிவகார்த்திகேயன்… உண்மையிலேயே இது தான்யா வளர்ச்சி…

- Advertisement -

தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரையில் சாதித்தவர்களின் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் சிவகார்த்திகேயன் தான். தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அது இது எது நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் ஒவ்வொரு வீடுகளுக்கும் பரீட்சையமான முகமாக அறிமுகமானவர் சிவகார்த்திகேயன். அந்த நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் அடித்த ஒவ்வொரு காமெடியும், இணையத்தில் பிரபலம்.

அவருக்கு ஹியூமர் எளிதாக வருவதால், சிவகார்த்திகேயனை பலரும் கொண்டாட ஆரம்பித்தனர். இந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்திக் கொண்ட அவர், வெள்ளித்திரையில் தனது முகம் தோன்றுவதில் குறியாக இருந்து அதற்கு ஏற்றவாறு காய்களை நகர்த்தினார். சிவகார்த்திகேயனின் ஒவ்வொரு அசைவுகளும் வெற்றியை கொடுக்க, தமிழ் திரையுலகம் அவரை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றது.

மூணு, மெரினா ஆகிய திரைப்படங்களில் சிவகார்த்திகேயனின் ஒன்லைன் காமெடி ஒர்க் அவுட் ஆக, அவர் கதாநாயகனாக நடித்த எதிர்நீச்சல் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தொடர்ந்து வருத்தப்படாத வாலிபர் சங்கம் ஜாக்பாட் அடிக்க, முக்கிய நடிகர்கள் லிஸ்டில் சேர்ந்தார் சிவகார்த்திகேயன். அவர் நடிக்கும் திரைப்படங்களின் கதைகள் சுமாராக இருந்தாலும், குடும்பத்தோடு சேர்ந்து பார்க்கும் அளவுக்கு கலகலப்பை ஊட்டுவதால் இன்று வரை சூப்பர் நட்சத்திரமாக அவர் ஜொலிக்கிறார்.

இதனிடையே ஏகப்பட்ட சறுக்கல்களை சிவகார்த்திகேயன் சந்தித்தாலும், அதிலிருந்து மீண்டு வருவதற்கான சூட்சமத்தை அவர் அறிந்திருக்கிறார். தமிழ் சினிமாவில் பல முக்கிய நடிகர்கள் இன்னும் நூறு கோடி ரூபாய் வசூலை நெருங்க முடியாத சூழலில், அதனை தனது டாக்டர் திரைப்படத்தின் மூலம் நிறைவேற்றினார் சிவகார்த்திகேயன். அவரது டான் திரைப்படமும் 125 கோடி ரூபாய் வசூல் ஈட்டியது.

தற்போது சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகிறது. இதனைத் தொடர்ந்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இது முழுக்க முழுக்க ஆக்ஷன் திரைப்படமாக இருக்கும் என அவர் ஏற்கனவே ஒருமுறை தெரிவித்து இருந்தார். இதனைத் தொடர்ந்து அவர் ஏ ஆர் முருகதாஸ் உடன் இணைகிறார். இந்த நிலையில் சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது,

விஜய் சாரும், இயக்குனர் ஏ ஆர் முருகதாஸும் இணையும்போது அந்த இடத்தில் என்டர்டைன்மெண்டில் ஒரு பையர் இருக்கும். அவர்கள் கூட்டணியில் துப்பாக்கி திரைப்படம் வெளியான போது டிக்கெட்டிற்க்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டது. அப்போது ஏ ஆர் முருகதாஸ் சாரிடம் உதவியாளராக இருந்த ராஜ்குமார் பெரியசாமி தான் எனக்கு டிக்கெட் வாங்கி கொடுத்தார். இன்று எனது 21 வது படத்தில் அவரது இயக்கத்தில் தான் நான் நடிக்கிறேன். அடுத்த படத்தில் ஏ ஆர் முருகதாஸ் சாருடனும் இணைகிறேன். இந்த நிகழ்வை நான் மிகவும் ரசிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

சற்று முன்