- Advertisement -
Homeபொழுதுபோக்குமாரி செல்வராஜின் வாழை படத்துக்கு பின்னாடி இப்படி ஒரு கதை இருக்குதா? - இதை சத்தியமா...

மாரி செல்வராஜின் வாழை படத்துக்கு பின்னாடி இப்படி ஒரு கதை இருக்குதா? – இதை சத்தியமா யாருமே எதிர்பார்க்கலை ப்ரோ…- ஆனா நீங்க லக்கி மேன்தான்!

- Advertisement -

நடிகர் மாரி செல்வராஜ் இதுவரை 3 படங்கள் மட்டுமே, தமிழ் சினிமாவுக்கு தந்துள்ளார். ஆனால் அந்த 3 படங்களுமே அவரை அடுத்தடுத்த நிலைகளுக்கு கொண்டு சென்ற படங்களாக அமைந்துவிட்டன. அதனால் மிக விரைவில் எளிதாக, தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துவிட்டார்.

சர்ச்சைக்குரிய விஷயங்கள், பிரச்சனைக்குரிய கதைகளை மாரி செல்வராஜ் படமாக்குவதால், எதிர்மறை விமர்சனங்களையும் அவர் அதிகமாக சந்திக்கிறார். என்றாலும், அவரது படைப்புகள் திரைக்களத்தில் பேசப்படுகின்றன. அதனால் மிக குறுகிய காலத்தில் கவனிக்கப்படும் இயக்குநர்களில் ஒருவராக அவர் இருக்கிறார்.

- Advertisement -

பரியேறும் பெருமாள் படத்திலும், தனுஷ் நடித்த கர்ணன் படத்திலும், வடிவேலு, உதயநதி ஸ்டாலின் நடித்த மாமன்னன் படத்திலும் இயக்குநர் மாரி செல்வாரஜ் முக்கிய கதைப்பொருளாக இந்த படங்களில் வைத்தது சாதிய வேறுபாடுகளை தான். சமுதாயத்தில் தீண்டாமை என்ற கொடுமை குறித்தே அவரது படங்கள் பேசி வருகின்றன.

இப்போது ஹாட் ஸ்டார் ஓடிடி நிறுவனத்துக்காக, தனது மனைவி பெயரில் மாரி செல்வராஜ் தயாரித்து இயக்குகிற படம் வாழை. இரண்டு நாட்களுக்கு முன் அதன் போஸ்டர் வெளியாகி பலரது மனதையும் கவர்ந்தது. இந்த படம் மாரி செல்வராஜ் வாழ்க்கையில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டது.

- Advertisement -

அதாவது வாழைத்தார் ஏற்றிச் செல்லும் ஒரு லாரி விபத்தில் சிக்குகிறது. இதில் பயணித்த சில சிறுவர், சிறுமிகள் உட்பட பலர் உயிரிழக்கின்றனர். இதுதான் படத்தின் மையக்கரு. இது மாரி செல்வராஜ் சிறுவனாக இருக்கும்போது அவரது வாழ்வில் நடந்த உண்மை சம்பவம். அந்த வாழைத்தார் ஏற்றி வந்த லாரியில் மாரி செல்வராஜூம் பயணித்து இருக்கிறார்.

இந்த கொடூர விபத்தில் லாரியில் பயணித்தவர்களில் மாரி செல்வராஜ் ஒருவரை தவிர மற்ற அனைவருமே உயிரிழந்து விட்டனர். உயிர் தப்பியவர் மாரி செல்வராஜ் மட்டுமே. அவரது குடும்பத்தை சேர்ந்த சிலரும் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர். அதனால், தன் வாழ்வில் நடந்த அந்த உண்மை சம்பவத்தையே வாழை என்ற படமாக உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் மாரி செல்வராஜ்.

- Advertisement -

சற்று முன்