- Advertisement -
Homeபொழுதுபோக்குரசிகர்கள் கொண்டாடித் தீர்த்த குடும்ப படத்தின் இரண்டாம் பாகம் ரெடியாகிறது... விஜய் படத்தின் இயக்குனர்தான் இதில்...

ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்த குடும்ப படத்தின் இரண்டாம் பாகம் ரெடியாகிறது… விஜய் படத்தின் இயக்குனர்தான் இதில் டைரக்டராம்…

- Advertisement -

இயக்குனரும் நடிகருமான மணிவண்ணனிடம் உதவியாளராக இருந்தவர் ராசு மதுரவன். அங்கிருந்து சினிமா கற்றுக் கொண்ட அவர், ஜெயராம் தேவயானியை வைத்து மணமகள் தேவை எனும் திரைப்படத்தை இயக்க இருந்தார். ஆனால் அந்தத் திட்டம் பாதியிலேயே நின்று போனது. இதன் பிறகு அஜித்தை வைத்து நம்ம வீட்டு கல்யாணம் எனும் படத்தை இயக்குவதற்கு ராசு மதுரவன் முயற்சித்தார். ஆனால் அதுவும் தோல்வியிலேயே முடிந்தது.

இப்படி இயக்குனராக முடியாமல் போராடிக் கொண்டிருந்த அவருக்கு சூப்பர் குட் பிலிம்ஸ் வாய்ப்பு கொடுத்தது. பிரசாந்த் மற்றும் ரம்பாவை வைத்து பூமகள் ஊர்வலம் என்னும் திரைப்படத்தை அவர் இயக்கினார். 1999 ஆம் ஆண்டு வெளியான அந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. படத்தில் காமெடி ஒர்க் அவுட் ஆகினாலும், அவருக்கு அடுத்த படத்தை இயக்குவதற்கான வாய்ப்பு கிடைக்காமல் போனது.

இடையே, உள்ளம் துள்ளுது தன்னாலே என்ற திரைப்படத்தை ராசு மதுரவன் இயக்கினார். இதில் பிரசாந்த் மற்றும் ஜோதிகா ஆகியோர் நடித்தனர். ஆனால் பாதியிலேயே இந்த படமும் நிறுத்தப்பட்டது. இப்படியான சூழலில் ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு, ராகவா லாரன்ஸ் வைத்து பாண்டி என்னும் திரைப்படத்தை ராசு மதுரவன் இயக்கினார். அம்மா சென்டிமென்ட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், கலவையான விமர்சனத்தையே பெற்றது.

இப்படியான சூழலில் ராசு மதுரவனுக்கு மூன்றாவது திரைப்படமாக அமைந்தது மாயாண்டி குடும்பத்தார். படத்தில் மணிவண்ணன், பொன்வண்ணன், சீமான், தருண் கோபி, ஜி எம் குமார், ரவி மரியா, நந்தா பெரியசாமி, சிங்கம்புலி, ராஜ்கபூர், ஜெகன்நாத் ஆகிய 10 இயக்குனர்கள் நடித்தனர். குடும்ப பின்னணியில் உருவான இந்த திரைப்படம், மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

அது மட்டுமல்லாமல் ராசு மதுரவன் யார் என்பதை ஊரறிய செய்தது. இதன்பிறகு கோரிப்பாளையம் திரைப்படத்தை எடுத்தார். அடுத்ததாக அவர் இயக்கிய முத்துக்கு முத்தாக திரைப்படம், நல்ல வரவேற்பை பெற்றது. இதன் மூலம் குடும்ப படங்களை இயக்குவதில் கெட்டிக்காரராக ராசு மதுரவன் கருதப்பட்டார். தொடர்ந்து பாண்டி ஒலிபெருக்கி நிலையம் எனும் திரைப்படத்தை இயக்கிய அவர், உடல்நலக்குறைவால் காலமானார்.

இப்படியான சூழலில் மாயாண்டி குடும்பத்தார் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க அதன் தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது. முதல் பாகத்தில் நடித்த அத்தனை நட்சத்திரங்களும் இரண்டாம் பாகத்திலும் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் முதல் பாகத்தில் நடித்த ஜெகன்நாத் தான், இந்தப் படத்தில் இயக்குனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாயாண்டி குடும்பத்தார் படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றதைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் எடுக்க இருப்பதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். கேபி ஜெகநாத் விஜயை வைத்து புதிய கீதை திரைப்படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்