- Advertisement -
Homeபொழுதுபோக்குதுபாய் மருத்துவமனையில் 3 நாட்கள் அட்மிட் செய்யப்பட்ட அஜீத்குமார், வெளிச்சத்துக்கு வந்த உண்மை - 2...

துபாய் மருத்துவமனையில் 3 நாட்கள் அட்மிட் செய்யப்பட்ட அஜீத்குமார், வெளிச்சத்துக்கு வந்த உண்மை – 2 பேர் இருந்தும் அஜீத் செய்த அந்த சம்பவம்

- Advertisement -

நடிகர் அஜீத்குமார் இப்போது துபாயில் மனைவி ஷாலினி மற்றும் தனது மகன், மகளுடன் இருந்து வருகிறார். துபாயில் அவருக்கு சொந்தமான வீடு உள்ளது. அதனால் அஜர்பைஜானில் நடந்துவரும் ஷூட்டிங் இடைவேளை நாட்களில், துபாய் சென்று விடுகிறார். துபாயில் உள்ள முக்கிய இடங்களுக்கு தன் குடும்பத்துடன் சென்று என்ஜாய் செய்கிறார்.

சென்னை உள்பட பிற மாநிலங்களை பொருத்தவரை அஜீத்குமார் ஸ்டார் செலிபரட்டியாக இருப்பதால், எங்கு அவரை பார்த்தால் ரசிகர்கள் கூட்டம் மொய்த்து விடுகிறது. ரசிகர் கூட்டத்தை கண்டாலே அஜீத்குமார் விரக்தி அடைந்து விடுகிறார். தனிமையில், பொது இடங்களுக்கு சென்றுவரும் சுதந்திரத்தை அவர் மிகவும் விரும்புகிறார்.

- Advertisement -

அதனால்தான் துபாய் போன்ற வெளிநாடுகளுக்கு சென்று மாதக்கணக்கில் அவர் இருந்து விடுகிறார். இப்போது துபாயில் சொந்தமாக வீடு இருப்பதால், மாதக்கணக்கில் அங்கேயே வசிக்கவும் அஜீத்குமார் துவங்கி விட்டார். அதுமட்டுமின்றி அவரது டிராவல் ஆபீஸ், சில பிஸ்னஸ் நிறுவனங்களும் அங்கு உள்ளன.

இந்நிலையில், கடும் சூறாவளி காற்று, மணல் புயல், கடும் பனி, மழை காரணமாக அஜர்பைஜானில் நடந்துவந்த விடாமுயற்சி ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளது. படத்தின் டைரக்டர் மகிழ்திருமேனி உள்ளிட்ட படக்குழுவினர் சென்னை வந்துவிட்டனர். ஆனால் அஜீத்குமார் துபாயில், தனது குடும்பத்தினருடன் இருந்து வருகிறார்.

- Advertisement -

இதுகுறித்து சமீபத்திய நேர்காணல் ஒன்றில் சினிமா விமர்சகர் செய்யாறு பாலு கூறியதாவது, ரசிகர்களின் தொந்தரவு இல்லாமல் படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்றுதான், அஜீத்குமார் விடாமுயற்சி படப்பிடிப்பு நடத்த அஜர்பைஜானை தேர்வு செய்தார். ஆனால் அங்கு அடிக்கடி இயற்கை சீற்றங்கள் ஏற்படுவதால் படப்பிடிப்பு தடைபடுகிறது. இப்போதும் ஷூட்டிங் நடக்காமல், துபாயில் அஜீத்குமார் இருக்கிறார்.

விஜயகாந்த் மறைவுக்கு அஜீத்குமார் வராதது குறித்து பலரும் விமர்சித்து வருகின்றனர். ஆனால் உண்மையில் நடந்தது இதுதான். அஜர்பைஜானில் நடந்த ஷூட்டிங்கில் ரிஸ்க் ஆன ஒரு சண்டைக்காட்சி படமாக்கப்பட்டுள்ளது. இரண்டு டூப் நடிகர் இருந்தும், அந்த ரிஸ்க் ஆன சண்டை காட்சியில் அஜீத்குமாரே நடித்துள்ளார். அதில் அவருக்கு காயம் ஏற்பட்டதால், துபாயில் உள்ள மருத்துவமனையில் 3 நாட்கள் அஜீத்குமார் அட்மிட் செய்யப்பட்டிருந்தார். அதனால்தான் அவர் சென்னை வர முடியவில்லை, என்று கூறியிருக்கிறார் செய்யாறு பாலு.

- Advertisement -

சற்று முன்