சமீபத்தில் சென்னையில் நீலம் அமைப்பு சார்பில் நீட் எதிர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாணவ மாணவியர் திரளாக பங்கேற்ற இந்த கூட்டத்தில் இயக்குனர்கள் பா ரஞ்சித் வெற்றிமாறன் அமீர் நடிகர் மன்சூர் அலிகான் நடிகைகள் ரேவதி ஆண்ட்ரியா உள்ளிட்டோர் கலந்துக்கொண்டு பேசினர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் பா ரஞ்சித், அமைச்சர் ராஜ் மோகன் குறித்தும் தவெக அமைச்சரவையில் உள்ள தலித் அமைச்சர்கள் குறித்தும் விமர்சித்து பேசினார். அமைச்சர் வன்னியரசு தவிர ஒரு தலித் அமைச்சர் கூட தலித் பிரச்னைகள் குறித்தும் உரிமைகள் குறித்தும் பேசவில்லை என்று விமர்சித்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் கூல் சுரேஷ் பேசியதாவது, ஏழெட்டு தலித் அமைச்சர்கள் இப்போது இருக்கறாங்க. எங்களுக்காக என்ன பண்ணினீங்க என்று இயக்குனர் பா ரஞ்சித் கோவமா பேசியிருந்தார். அதே மாதிரி ராஜ்மோகன் எழும்பூர் தொகுதியில் நிற்கும்போதுதான் எங்களுக்கு அவர் தலித் என்றே தெரிந்தது என்றும் கூறியிருக்கிறார்.
அவர் எங்களுக்கு என்ன செய்திருக்கிறார் என்று உரிமையோடு கேட்டிருக்கிறார். அதே உரிமையோடு நான் கேட்கிறனே். ரஞ்சித் சார் நான் உங்களை கேட்கிறேன். எனக்கு ஏதாவது பண்ணினீங்களா? உங்க வீட்டுக்கும் என் வீட்டுக்கும் எவ்வளவு தூரம்? 4வது வீடு. பா ரஞ்சித் வீட்டுக்கும் கூல் சுரேஷ் வீட்டுக்கும் 4வது வீடு.
எத்தனை தடவை உங்க வீட்டுக்கு வந்து நான் நின்னிருப்பேன்? எத்தனை தடவை உங்க ஆபீஸ்க்கு வந்து நான் நின்னிருப்பேன்? எத்தனை பொது நிகழ்ச்சியில் உங்களை நான் சந்திச்சிருப்பேன்? ஒரே ஒரு வாய்ப்பு இல்லை. 20 25 வருஷமா உங்களுக்கு என்னை தெரியும். எனக்கு எதுவுமே பண்ணலே.
ரெண்டு மாசம்தான் ஆச்சு. ராஜ்மோகன் அமைச்சராகி ரெண்டு மாசம்தான் ஆவுது. அதுக்குள்ள என்ன பண்ணினீங்க அப்படீன்னு ராஜ்மோகனை கேட்கறீங்களே? இது நியாயமா? சொல்லுங்க. வெயிட் பண்ணுங்க என்று நடிகர் கூல் சுரேஷ் தலித் அமைச்சர்களை விமர்சித்த இயக்குனர் பா ரஞ்சித்துக்கு பதிலடி தந்திருக்கிறார். இது இணையத்தில் வைரலாகி வருகிறது.





