- Advertisement -
Homeபொழுதுபோக்குஅஜீத் நடித்த விடாமுயற்சி இத்தனை மொழிகளில் ரிலீஸ் ஆகிறதா, ஓடிடி ரைட்ஸ் இவங்க வாங்கிட்டாங்களா? -...

அஜீத் நடித்த விடாமுயற்சி இத்தனை மொழிகளில் ரிலீஸ் ஆகிறதா, ஓடிடி ரைட்ஸ் இவங்க வாங்கிட்டாங்களா? – விடாமுயற்சி லேட்டஸ்ட் அப்டேட்!

- Advertisement -

லைகா புரடக்சன்ஸ் தயாரிப்பில் நடிகர் அஜீத்குமார் நடித்துவரும் படம் விடாமுயற்சி. கடந்த 3 மாதங்களுக்கு மேலாக அஜர்பைஜானில் ஷூட்டிங் நடந்து வருகிறது. பொங்கல் பண்டிகை விடுமுறைக்கு பிறகு, இந்த வார இறுதிக்குள் அஜீத்குமார் உள்ளிட்ட படக்குழு அஜர்பைஜான் செல்கிறது.

வரும் பிப்ரவரி மாத இறுதிக்குள் படப்பிடிப்பை முடித்துக் கொள்ள நிர்பந்தம் இயக்குநர் மகிழ்திருமேனிக்கு ஏற்பட்டுள்ளது. ஏனெனில் மார்ச் மாதம், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் புதுப்படம் ஒன்றில் நடிக்க அஜீத்குமார் ஏற்கனவே கமிட் ஆகி இருக்கிறார்.

இந்த படத்தை பொருத்தவரை அஜீத் அர்ஜூன் என்ற கேரக்டரில் நடிக்கிறார். திரிஷா ஜோடியாக நடித்துள்ளார். வில்லன் அர்ஜூன். ரெஜினா, ஆரவ், சஞ்சய் தத் உள்ளிட்டோரும் நடித்துள்ளதாக தெரிய வருகிறது. காணாமல் போய், வில்லனிடம் சிக்கிக்கொண்ட தனது மனைவியை கதாநாயகன் மீட்பதுதான் கதை.

விடாமுயற்சி படத்தை வரும் மே 1 அன்று, அஜீத்குமார் பிறந்த நாளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. ஆனால், அஜர்பைஜானில் தொடரும் பனிப்பொழிவு, கடும் குளிர், மழை, மணல் புயல் போன்ற காரணங்களால் படப்பிடிப்பு தொடர்ந்து தாமதமாகிறது. இதுவரை 50 முதல் 60 சதவீதம் மட்டுமே படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாகவும் தெரிகிறது.

இதற்கிடையே நடிகர் விஜயகாந்த் மறைவுக்கு அஜீத்குமார் வந்து துக்கம் விசாரிக்காமல் தவிர்த்தது, நான்கு வரி இரங்கல் கூட தெரிவிக்காமல் மவுனம் சாதித்தது, சென்னைக்கு வந்த பிறகு, இரவு 3 மணிக்கு துக்கம் விசாரிக்க, கேப்டன் வீட்டில் அனுமதி கேட்டது போன்ற விஷயங்களும் பெரிய சர்ச்சையாக மாறி இருக்கிறது.

இப்போது விடாமுயற்சி படத்தின் புதிய தகவலாக, இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் ரிலீஸ் ஆகிறது. மேலும், விடாமுயற்சி படத்தின் ஓடிடி உரிமத்தை நெட்பிளிக்ஸ் வாங்கியிருப்பதை படக்குழு உறுதிபடுத்தியுள்ளது. ஆனால், எத்தனை கோடி விலையில், இந்த உரிமம் பெறப்பட்டது என்ற தகவல் உறுதியாக தெரியவில்லை.

சற்று முன்