- Advertisement -
Homeபொழுதுபோக்குசினிமா பிரபலங்கள் குவிந்த திருமண விழா, பாரத பிரதமர் மோடி பங்கேற்பு - கோலாகலமாக நடந்த...

சினிமா பிரபலங்கள் குவிந்த திருமண விழா, பாரத பிரதமர் மோடி பங்கேற்பு – கோலாகலமாக நடந்த வில்லன் நடிகரின் மகள் திருமணம்!

- Advertisement -

கடந்த நான்கு நாட்களாக தமிழ்நாட்டில் பொங்கல் விழா சீரும் சிறப்புமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழர் திருநாளை போற்றும் விதமாக பொங்கல் வைத்தும், மாடுகளை அலங்கரித்தும், ஜல்லிக்கட்டு போன்ற வீரவிளையாட்டுகளையும் நடத்தி இந்த விழாவை மக்கள் கொண்டாடினர்.

அதுமட்டுமின்றி பொங்கல் பண்டிகை என்றாலே புதுப்படங்கள் ரிலீஸ் என்பதும் வழக்கமானது. அயலான், கேப்டன் மில்லர், மிஷன் சேப்டர் 1, மெரி கிறிஸ்துமஸ் போன்ற படங்கள் திரைக்கு வந்தன. லால் சலாம், அரண்மனை 4 ஆகிய படங்கள், ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வௌியீடு தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

தமிழ்நாட்டில் நடந்த பொங்கல் விழா போல, கேரளாவில் திருமண விழா ஒன்று, சமீபத்தில் மிகப் பிரமாண்டமாக நடந்துள்ளது. பிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபி மகள் பாக்யாவின் திருமண விழா கோலாகலமாக நடந்துள்ளது. இந்த விழாவின் புகைப்படங்கள், வீடியோக்கள் இப்போது வைரலாகி வருகின்றன.

மலையாளத்தில் மிக பிரபலமாக முன்னணி நடிகர்களில் ஒருவர் சுரேஷ்கோபி. இவர் தமிழில் தீனா, சமஸ்தானம், தமிழரசன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக ஷங்கர் இயக்கிய ஐ படத்தில் பிரதான வில்லன் கேரக்டரில் டாக்டராக நடித்திருப்பார்.

- Advertisement -

சுரேஷ் கோபி இல்ல திருமண விழாவில் மலையாள ஸ்டார் நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால், ஜெயராம், திலீப் உள்ளிட்ட பல முக்கிய நடிகர், நடிகையர் கலந்துக்கொண்டனர். தமிழ் நடிகை குஷ்புவும் விழாவில் பங்கேற்றார். மிகவும் கோலாகலமாக இந்த திருமண விழா அரங்கேறியது.

சுரேஷ் கோபி பாஜக எம்பியாக உள்ளதால், இந்த திருமண விழாவில் முதன்மை சிறப்பு விருந்தினராக பாரதப் பிரதமர் நரேந்திமோடி பங்கேற்றார். அவரது கையால் மாலை எடுத்துத் தர மணமக்கள் மாற்றிக்கொண்டனர். அவரது முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. அங்கிருந்த மோகன்லால் உள்ளிட்ட நடிகர்களுடன் பிரதமர் மோடி உரையாடிய வீடியோ, புகைப்படங்கள் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

- Advertisement -

சற்று முன்