- Advertisement -
Homeபொழுதுபோக்குஆரம்பிக்கலாங்களா... வந்தாச்சு உலகநாயகனின் தக் லைஃப் அப்டேட்... காலரை தூக்கி விடும் கமல் ரசிகர்கள்...

ஆரம்பிக்கலாங்களா… வந்தாச்சு உலகநாயகனின் தக் லைஃப் அப்டேட்… காலரை தூக்கி விடும் கமல் ரசிகர்கள்…

- Advertisement -

உலகநாயகன் கமல்ஹாசனுக்கு கடந்த ஆண்டு எந்த ஒரு திரைப்படமும் வெளியாகவில்லை. 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெளியாகி இருந்த விக்ரம் திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்தது. பல ஆண்டுகளுக்குப் பிறகு கமல்ஹாசனுக்கு மிகப்பெரிய அளவில் வசூல் குவித்த திரைப்படமாக விக்ரம் அமைந்தது. இதனால் மகிழ்ச்சி அடைந்த கமல்ஹாசன், இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நடிகர் சூர்யா ஆகியோருக்கு பரிசளித்தார்.

இதைத்தொடர்ந்து தயாரிப்பிலும் தனி கவனம் செலுத்த ஆரம்பித்தார் கமல்ஹாசன். அவரது தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் கீழ் சிவகார்த்திகேயனின் 21வது திரைப்படம் உருவாகி வருகிறது. இதனை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். சாய் பல்லவி இதில் கதாநாயகியாக நடிக்கிறார். இந்தப் படத்தைப் போல சிம்புவின் 48வது திரைப்படத்தையும் கமல்ஹாசன் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது.

- Advertisement -

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமிதான் இதனை இயக்குகிறார். ஆனால் ப்ரீ ப்ரொடக்சனுக்காகவே அதிக நாட்கள் எடுத்துக் கொள்வதால், இதன் படப்பிடிப்பு இன்னும் ஆரம்பமாகவில்லை. இதன் நடுவே, இந்தியன் 2 திரைப்படத்திலும் கமல்ஹாசன் நடித்து வந்தார். கிட்டத்தட்ட இதன் படப்பிடிப்பு நீண்ட நாட்களாகவே நடைபெற்று வருகிறது. ஆரம்பத்தில் இதன் சூட்டிங்கின் போது கமல்ஹாசனுக்கும் சங்கருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது.

பிறகு விபத்து உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இதன் படப்பிடிப்பு தள்ளிப் போய்க் கொண்டே இருந்த சூழலில், தற்போது அது நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனை இரண்டு மற்றும் மூன்று பாகங்களாக சங்கர் எடுத்து வைத்துள்ளாராம். அனிருத் இதற்கு இசையமைத்திருக்கிறார். இந்தப் படம், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

இதனிடையே, எச் வினோத்துடன் ஒரு படம், மணிரத்னத்துடன் ஒரு படம் என கமிட் ஆனார் கமல்ஹாசன். மேலும் சண்டை பயிற்சியாளர்கள் அன்பறிவ் படத்திலும் அவர் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. முதலில் வினோத் படத்திற்கான பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது புதிய திருப்பமாக மணிரத்னம் படத்தின் சூட்டிங் ஆரம்பமாகியுள்ளது. இந்தப் படத்திற்கு தக் லைஃப் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் ஜெயம் ரவி, துல்கர் சல்மான், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, கௌதம் கார்த்திக் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார். உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம், கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறது. இதன் அறிவிப்பு வீடியோ வரவேற்பை பெற்ற நிலையில், தக் லைப் திரைப்படத்தின் சூட்டிங் சென்னையில் தொடங்கியுள்ளது. இதற்கான அறிவிப்பையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

- Advertisement -

சற்று முன்