மிஷ்கின் இயக்கத்தில் கடைசியாக வெளியான திரைப்படம் சைக்கோ. உதயநிதி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்த அந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. திரில்லர் ஜானரில் எடுக்கப்பட்ட அந்த திரைப்படத்திற்கு பலரும் வரவேற்பு கொடுத்தார்கள். 2020 ஆம் ஆண்டு இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியிருந்தது.
அதன் பிறகு என்னவோ இயக்கத்தின் பக்கம் மிஷ்கின் கவனம் செலுத்தவே இல்லை. அதற்கு பதிலாக நடிப்பின் மீது நாட்டம் செலுத்த ஆரம்பித்தார் மிஷ்கின். சவரக்கத்தி திரைப்படத்தில் தொடங்கி, சூப்பர் டீலக்ஸ், பேச்சுலர் என பல்வேறு திரைப்படங்களில் மிஷ்கினை பார்க்க முடிந்தது. இதில் மாவீரன் திரைப்படத்தில் ஒரு படி மேலே போய் வில்லன் கதாபாத்திரத்தில் மிஷ்கின் நடித்தார்.
அதில் அவரது நடிப்பும் பாராட்டப்படும் வகையில் அமைந்தது. தொடர்ந்து லியோ திரைப்படத்திலும் வந்து போன மிஷ்கின், தற்போது பிரதிப் ரங்கநாதன் நடித்து வரும் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி, மற்றும் டிராகன் ஆகிய திரைப்படங்களில் இடம் பெற்றுள்ளார். இதுபோக இயக்கத்திலும் அவர் தற்போது கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார்.
ஏற்கனவே மிஸ்கின் இயக்கத்தில் வெளியான பிசாசு திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தை சில வருடங்களுக்கு முன்பே மிஷ்கின் ஆரம்பித்தார். ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அந்த திரைப்படத்தில் கேமியோ ரோலில் வந்து போகிறார் விஜய் சேதுபதி. இதன் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படாமல் இருந்த சூழலில், அண்மையில் பிசாசு 2 படத்தின் போஸ்டர் வெளியானது.
அதில் மார்ச் மாதம் பிசாசு 2 திரைப்படம் ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதேபோல் விஜய் சேதுபதியை வைத்து டிரெயின் என்னும் திரைப்படத்தை அவர் இயக்கி இருக்கிறார். இதுவும் கிரைம் திரில்லர் படமாக தான் உருவாகி இருக்கிறது. முழுக்க முழுக்க ரயில் பயணத்தை இதில் காட்டி இருக்கிறார்கள். படம் குறித்து பேசி இருக்கும் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு,
ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் மொத்தம் எட்டு கம்பார்ட்மெண்டுகளை வைத்து இதன் சூட்டிங்கை எடுத்திருக்கிறோம். படம் பார்க்கும்போது நிச்சயம் ரயிலில் பயணம் செல்வது போன்ற ஒரு அனுபவத்தை கொடுக்கும். ரசிகர்கள் அனைவரும் இருக்கையின் நுணுக்கி வந்து இந்த திரைப்படத்தை பார்ப்பார்கள். மிஷ்கின் ஒரு குழந்தை போல, அவருடன் சேர்ந்து படம் இருப்பதில் நான் மகிழ்ச்சி அடைந்துள்ளேன். இதில் ஸ்ருதிஹாசனும் நடித்திருக்கிறார் என்று தெரிவித்துள்ளார். அனேகமாக இந்த திரைப்படம் கோடை விடுமுறையில் வெளியாகும் என்று பேசப்படுகிறது.





