- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் விஜயிடம் கதை சொன்னேன், உடனே ஓகே சொன்னார், ஆனால் அதை மட்டும் கேட்க...

நடிகர் விஜயிடம் கதை சொன்னேன், உடனே ஓகே சொன்னார், ஆனால் அதை மட்டும் கேட்க மறந்துவிட்டேன் – நடிகர் ஆர்ஜே பாலாஜி சொன்ன புது தகவல்

- Advertisement -

நடிகர் ஆர்ஜே பாலாஜி, ரேடியோ ஜாக்கியாக தனது பயணத்தை துவங்கியவர், இப்போது இயக்குநராக நடிகராக இருக்கிறார். துவக்கத்தில் பிரபுதேவா, கவுதம் கார்த்திக், ஜீவா போன்ற ஹீரோக்களுக்கு பிரண்ட் ஆக நடித்து வந்து ஆர்ஜே பாலாஜி ஒரு கட்டத்தில் நடிகராக மாறினார்.

அவர் முதன்முதலாக நடித்த எல்கேஜி படம் நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து, மூக்குத்தி அம்மன் என்ற படத்தை டைரக்ட் செய்து, ஹீரோவாகவும் நடித்தார். சாமியார் ஒருவரின் தில்லுமுல்லுகளை அம்பலப்படுத்தும் இந்த கதையில், மூக்குத்தி அம்மனாக நயன்தாரா நடித்திருந்தார்.

- Advertisement -

இந்த படத்தை தொடர்ந்து வீட்ல விசேஷம் என்ற படத்தில் ஹீரோவாக நடித்து, அந்த படத்தையும் டைரக்ட் செய்திருந்தார். வளர்ந்த பிள்ளைகள் இருக்கும் வீட்டில் 50 வயது கடந்த தாய், மீண்டும் கர்ப்பமாவதால் ஏற்படும் சங்கடங்களை மையப்படுத்திய இந்த படம், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் சத்யராஜ் – ஊர்வசி, ஆர்ஜே பாலாஜியின் வயதான பெற்றோராக நடித்திருப்பர்.

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தை இயக்கிய கோகுல் இயக்கத்தில் உருவான படம் சிங்கப்பூர் சலூன். இந்த படத்தில் ஹீரோவாக ஆர்ஜே பாலாஜி நடித்திருக்கிறார். ஹீரோயினாக மீனாட்சி சவுத்ரி நடித்துள்ளார். கேமியோ ரோலில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகர் ஜீவா நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் நடிகர் அரவிந்த் சாமியும் நடித்துள்ளார். இந்த படம் இன்று ரிலீஸ் ஆகிறது.

- Advertisement -

இந்நிலையில், நடிகர் விஜய் படத்தை இயக்கப் போவதாக ஒரு லேட்டஸ்ட் தகவலை நடிகர் ஆர்ஜே பாலாஜி தெரிவித்துள்ளார். சிங்கப்பூர் சலூன் படத்தின் பிரமோ நிகழ்ச்சிக்காக தொடர்ந்து நேர்காணலில் பங்கேற்று வரும் ஆர்ஜே பாலாஜி, இந்த புதிய தகவலை இப்போது தெரிவித்துள்ளார்.

வாரிசு, லியோ படங்களுக்கு முன்பே, நான் விஜயிடம் ஒரு கதை சொன்னேன். அவருக்கும் கதை பிடித்து விட்டது. யோசித்து பிறகு பணணலாம். ஏப்ரல் மாதத்தில் துவங்கலாம் என்றார். ஆனால் அவரிடம் எந்த ஏப்ரல் மாதம் என்று கேட்க மறந்துவிட்டேன். அவருடன் பணிசெய்ய எனக்கும் ஆர்வமாக இருக்கிறது.விஜய்க்கு கதை எழுத குறைந்தது ஆறு மாதங்கள் தேவைப்படும் என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்