- Advertisement -
Homeபொழுதுபோக்குபாலிவுட் திரையுலகம் குறித்து கடுமையாக விமர்சித்த இந்தி நடிகர் அனுராக் காஷ்யப் - கடைசியாக அவர்...

பாலிவுட் திரையுலகம் குறித்து கடுமையாக விமர்சித்த இந்தி நடிகர் அனுராக் காஷ்யப் – கடைசியாக அவர் சொன்ன விஷயம்தான் இதில் ஹைலைட்!

- Advertisement -

இந்தி சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகராக இயக்குனராக இருப்பவர் அனுராக் காஷ்யப். தமிழில் சினிமாவிலும் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். குறிப்பாக இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக, நயன்தாராவை மிரட்டிக்கொண்டே இருப்பார். லியோ படத்தில் வந்தவுடன் அவரை விஜய் சுட்டு விடுவார். ஒரு நிமிட காட்சியில் வந்தால் போதும் என அனுராக் காஷ்யப் அந்த படத்தில் கேட்டு நடித்திருந்தாராம்.

அடுத்து அனுராக் காஷ்யப் நடிப்பில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த படம் மகாராஜா. விஜய் சேதுபதி நடிப்பில் 50வது படமாக இந்த படம் கடந்தாண்டில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது. இதில் வீடுகளில் திருடும் ஒரு வித்யாசமான கேரக்டரில் அனுராக் காஷ்யப் நடித்து அசத்தியிருந்தார்.

- Advertisement -

அதே போல் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை 2 படத்திலும், மலையாளத்தில் வெளியான ரைபிள் கிளப் படத்திலும் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தார். இந்தி படங்களை காட்டிலும் தென்னிந்திய படங்களில் நடிக்க அனுராக் காஷ்யப் அதிக ஆர்வம் காட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் நடிகர் அனுராக் காஷ்யப் கூறியதாவது, இந்தி சினிமாத் துறையில் வேலை செய்து படங்களை டைரக்ட் செய்து எனக்கு வெறுத்துப் போய்விட்டது. புதிதான எந்த ஒரு முயற்சியும் இங்கு என்னால் எடுக்க முடியவில்லை.

- Advertisement -

தயாரிப்புகளிடம் படம் இயக்கலாம் என்று சென்றால், வணிக நோக்கத்துடன் மட்டுமே ஒரு திரைப்படத்தை அணுகுகின்றனர். ஏற்கனவே மெகா ஹிட் ஆன படங்களை மட்டுமே இந்தி சினிமா ரீ மேக் செய்கிறது. புதிதாக அவர்கள் எதையும் முயற்சி செய்ய மறுக்கிறார்கள்.

இதனால் நான் என் வாழ்விடமாக உள்ள மும்பையை விட்டுவிட்டு அடுத்த ஆண்டில் தென்னிந்தியாவிற்கு குடி பெயர இருக்கிறேன். தென்னிந்தியாவுக்கு வந்தால்தான் எனக்கு ஒரு நல்ல தூண்டுதல் கிடைக்கிறது. ஆனால் இங்கு மும்பையில் இருந்தால் நான் இப்படியே இருந்து வயதாகி இறந்து போய் விடுவேன் என அனுராக் காஷ்யப் வருத்தமாக கூறியிருக்கிறார். இது இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்