- Advertisement -
Homeபொழுதுபோக்குஅஜித் - ஆதிக் படத்தின் ஒன்லைன் இதுதானாம்... ஏகேவுக்கு எதிராக நடிக்கும் இரண்டு வில்லன்கள்...

அஜித் – ஆதிக் படத்தின் ஒன்லைன் இதுதானாம்… ஏகேவுக்கு எதிராக நடிக்கும் இரண்டு வில்லன்கள்…

- Advertisement -

நடிகர் அஜித்குமார் துணிவு திரைப்படத்தை தொடர்ந்து தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். முன்தினம் பார்த்தேனே எனும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான மகிழ் திருமேனி இந்த படத்தை இயக்குகிறார். இவர் தடைகிற தாக்க, மீகாமன், தடம், கலகத்தலைவன் ஆகிய திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். தற்போது அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படத்தை, லைகா நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இதற்கு இசை அமைக்கிறார்.

இதன் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு மே மாதம் இதற்கான அறிவிப்பு வெளியானாலும், அக்டோபர் மாதம் தான் படப்பிடிப்பு தொடங்கியது. அன்று முதல் இப்போது வரை அஜர்பைஜான் நாட்டிலேயே சூட்டிங் நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட முழு படத்தையும் அந்த நாட்டிலேயே எடுத்து முடிக்க மகிழ்திருமேனி திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

இந்தப் படத்தில் திரிஷா, அர்ஜுன், பிக் பாஸ் புகழ் ஆரவ், ரெஜினா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். அவ்வப்போது படப்பிடிப்பில் எடுக்கப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. சமீபத்தில் கூட, அஜர்பைஜான் நாட்டு இந்திய தூதரக அதிகாரிகளுடன் அஜித் சந்தித்த புகைப்படம் வெளியானது. மேலும் படப்பிடிப்பிலும் அவர் சக நடிகருடன் எடுத்த புகைப்படங்கள் வெளியாகிறது.

ஆனால் இன்றுவரை லைக்கா நிறுவனம் படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்தும், அதற்கான அப்டேட் பற்றியும் வெளியிடாமல் இருக்கிறது. இப்படியான சூழலில் அஜித்தின் அடுத்த பட அறிவிப்பு குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அஜித் குமாரின் 63வது திரைப்படமாக உருவாகும் இதனை, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார்.

- Advertisement -

இவர் ஏற்கனவே, திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன், பகீரா, மார்க் ஆண்டனி ஆகிய திரைப்படங்களை இயக்கியிருந்தார். இதில் கடைசியாக வெளிவந்த மார்க் ஆண்டனி திரைப்படம் தான், விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு நல்ல பெயரை பெற்று கொடுத்தது. இப்படி சூழலில் அஜித்துடன் அவர் இணைந்திருக்கும் திரைப்படத்தை, தெலுங்கின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்திரி தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அந்த படம் குறித்த புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது படத்தை 80களின் கிராமத்து பின்னணியில் எடுக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் தபு நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதுபோக வில்லன்களாக எஸ் ஜே சூர்யா மற்றும் அரவிந்த்சாமி ஆகியோரை நடிக்க வைக்க ஆதிக்பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம். கே ஜி எஃப் படத்தின் மூலம் புகழ்பெற்ற, ஸ்ரீநிதி ஷெட்டியும் படத்தில் இருப்பதாக தெரிகிறது. இப்படி அடுத்தடுத்து வெளியாகும் தகவல்களால் அஜித் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

- Advertisement -

சற்று முன்