- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய் முதலமைச்சரானால் அஜீத்குமாருக்கு இப்படி ஒரு பதவியா? - ப்ளுசட்டை மாறன் போட்ட டிவீட்...

விஜய் முதலமைச்சரானால் அஜீத்குமாருக்கு இப்படி ஒரு பதவியா? – ப்ளுசட்டை மாறன் போட்ட டிவீட் வைரல்

- Advertisement -

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதாக அறிவித்து தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை அறிவித்துள்ளார். கடந்த 2ம் தேதி மதியம், விஜய் இந்த அறிவிப்பை வெளியிட்ட நிலையில், கடந்த 4 நாட்களாக இணையத்தில் விஜய் கட்சி குறித்த தகவல்களே அதிகளவில் வைரலாகி வருகின்றன.

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என, தமிழக மக்கள் ஆவலாக எதிர்பார்த்த நிலையில், அவர் அரசியலுக்கு வருவது போல பாசாங்கு காட்டிவிட்டு, திடீரென பின்வாங்கி விட்டார். கமல்ஹாசன், எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல், திடீரென மக்கள் நீதிமய்யம் என்ற கட்சியை துவங்கினார்.

- Advertisement -

இப்போது அதே போல் விஜய் அரசியலுக்கு வருவார் என ரசிகர்கள் மத்தியில் மட்டுமே பேசப்பட்ட நிலையில், அதை உறுதிபடுத்தும் விதமாக, தனது அரசியல் வருகையை அவர் அறிவித்து விட்டார். அதுவும் சட்டசபை தேர்தல்தான் தங்கது இலக்கு என்றும் அதிமுக, திமுக கட்சிகளுக்கும் செக் வைத்துள்ளார். இது என்ன புது தலைவலி என அதிமுக, திமுகவினர் விஜயை, தங்கள் அரசியல் எதிரியாக இப்போதே பார்க்க துவங்கி விட்டனர்.

இதற்கிடையே சினிமாத்துறையில் விஜய்க்கு போட்டியாளராக கருதப்பட்டவர் நடிகர் அஜீத்குமார். அவர்களுக்குள் இப்படி ஒரு போட்டி இருக்கலாம், அல்லது இல்லாமலும் இருக்கலாம். ஆனால் விஜய் மற்றும் அஜீத் ரசிகர்கள், இரு தரப்பாக பிரிந்து நின்றுதான், தங்களது அபிமான நடிகருக்காக சண்டையிட்டு கொள்கின்றனர். இனி, விஜய் அரசியலுக்கு செல்வதால் அஜீத், விஜய் ரசிகர்களுக்குள் சண்டைக்கு வாய்ப்பில்லை.

- Advertisement -

விஜய் கட்சி துவங்கியது முதல், இணையத்தில் பலவிதமான கிண்டல், கேலி, கலாய்க்கும் மீம்ஸ் அதிகரித்து வருகிறது. அதில் ப்ளுசட்டை மாறன், சிலவற்றை தனது எக்ஸ் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அதில், ஒரு போக்குவரத்து போலீஸ்காரர் ஒருவர், அஜீத்குமாரிடம் லைசென்ஸ் கேட்பது போலவும் அதற்கு அவர், நான் சி எம் ( விஜய்) பிரண்டு என்று கூறுவது போல சித்தரிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் லியோ படம் வெற்றி விழாவில் பங்கேற்ற விஜய், மேடையில் பேசினார். அப்போது நீங்கள் முதலமைச்சரானால் லோகேஷ் கனகராஜூக்கு என்ன பதவி கொடுப்பீர்கள் என்று கேட்ட போது, அதற்கு விஜய் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அமைச்சர் பதவி கொடுக்கலாம் என்று விளையாட்டாக கூறியிருப்பார். அதுபோல் இனி உண்மையில் விஜய் தமிழக முதலமைச்சரானால், அஜீத்குமாருக்கு சுற்றுலா துறை அமைச்சர் பதவி கிடைக்கும் எனவும் கிண்டலடித்துள்ள மீம் ஒன்றையும் பதிவிட்டுள்ளார் ப்ளு சட்டை மாறன். ஏனெனில், அஜீத்குமார் சுற்றுலா பிரியா் என்பதுதான் இந்த கிண்டலுக்கு காரணம். இந்த மீம்ஸ் இப்போது வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்