- Advertisement -
Homeபொழுதுபோக்கு9ம் வகுப்பு படிக்கும்போதே அந்த விஷயத்துக்காக நான் டிமிக்கி கொடுத்தவள் - பல ஆண்டுகளுக்கு பின்...

9ம் வகுப்பு படிக்கும்போதே அந்த விஷயத்துக்காக நான் டிமிக்கி கொடுத்தவள் – பல ஆண்டுகளுக்கு பின் உண்மையை சொன்ன நடிகை கீர்த்தி சுரேஷ்

- Advertisement -

நடிகை கீர்த்தி சுரேஷ், தமிழ் சினிமாவில் பிஸியாக நடித்து வரும் ஒரு முக்கிய நடிகையாக இருக்கிறார். மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். சமீபமாக இந்தி படவுலகிலும் காலடி வைத்திருக்கிறார். நடிகர் வருண் தவானுடன், அட்லி தயாரிக்கும் தெறி இந்தி ரீமேக்கில் தற்போது நடித்து வருகிறார்.

தமிழில் பைரவா, அண்ணாத்த, சர்க்கார், தொடரி, ரெமோ, ரஜினி முருகன், சாமி 2, நடிகையர் திலகம் என பல படங்களில் நடித்திருக்கும் அவர், இப்போது ஜெயம் ரவியுடன் நடித்த சைரன் படம் வெளிவர இருக்கிறது. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் போலீஸ் அதிகாரி கேரக்டரில் நடித்திருக்கிறார்.

இப்போதெல்லாம் படம் ரிலீஸ் ஆகும் நேரத்தில், படம் குறித்த பிரமோவுக்காக படத்தில் நடித்த நடிகர், நடிகையர், டைரக்டர் என பிரமோ நிகழ்ச்சியில் பங்கேற்று படம் குறித்த பல தகவல்களை கூறி படத்தை பார்க்கும் ஆர்வத்தை ரசிகர்கள் மத்தியில் தூண்டுகின்றனர். அதனால் படம் பார்க்க வருவோர் எண்ணிக்கை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.

அந்த வகையில் சைரன் படத்தில் நடித்த ஹீரோ ஜெயம் ரவி, ஹீரோயின் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்றனர். அப்போது படம் சார்ந்த விஷயங்களை மட்டுமின்றி தங்களது சொந்த வாழ்க்கை சம்பந்தமாகவும் பல விஷயங்களை வெளிப்படையாக பகிர்ந்துக்கொண்டனர்.

கீர்த்தி சுரேஷ் கூறுகையில், நான் 9ம் வகுப்பு படித்த போது அக்கா 12ம் வகுப்பு படித்தாள். அதன்பின் படிக்க அவள் அமெரிக்கா சென்றுவிட்டாள். ஆனால் நான் அமெரிக்கா போகக் கூடாது என அப்போதே தீர்மானித்தேன். அதற்கு காரணம் எனக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஆசை இருந்தது.

அமெரிக்கா சென்றால் அது நடக்காது என, இங்கேயே டிமிக்கி கொடுத்துவிட்டு இருந்துவிட்டேன். 6 ஆண்டுகள் கழித்து வந்த என் அக்கா எனக்கு சப்போர்ட்டாக இருந்தார். எனக்கு நடிப்பு வருமா, நடிப்பாளா என்ற சந்தேகம் என் அப்பாவுக்கு இருந்தது. நடிப்பு சரியாக வரவில்லை என்றால் என்ன செய்வாள் என கவலைப்பட்டார். அக்காவும் பிரியன் சாரும் என் அப்பாவிடம் பேசி, நான் நடிப்பதற்கு அப்பாவை சம்மதிக்க வைத்தனர், என்று கூறியிருக்கிறார்.

சற்று முன்