- Advertisement -
Homeபொழுதுபோக்குஅரசியல் கட்சி பெயரை அறிவித்த நடிகர் விஜய், கடும் விமர்சனத்தில் சிக்கிக்கொண்ட ரஜினிகாந்த் - அதனால்தான்...

அரசியல் கட்சி பெயரை அறிவித்த நடிகர் விஜய், கடும் விமர்சனத்தில் சிக்கிக்கொண்ட ரஜினிகாந்த் – அதனால்தான் கடுப்பில் அப்படி சொன்னாரோ?

- Advertisement -

நடிகர் விஜய், தமிழக வெற்றி கழகம் என்ற தனது கட்சி பெயரை அறிவித்து, 10 நாட்களாகிறது. இந்த 10 நாட்களில், விஜய் அரசியல் பிரவேசம் குறித்த சகல தரப்பு மக்களிடமும் பேச்சு எழுந்துள்ளது. அவருக்கு எதிரான விமர்சனங்கள் இதில் மிக குறைவு என்பதும் கவனிக்கத்தக்கது.

ஏனெனில் நடிகர் விஜய், பொதுவாக கடுமையான விமர்சனங்களில் சிக்கியது கிடையாது. சினிமா சார்ந்து சில விஷயங்களில் அவர் விமர்சிக்கப்பட்டாலும், பொது வாழ்வில் அவர் மீது களங்கம் தரக்கூடிய அளவுக்கு பெரிய குற்றச்சாட்டுகள் எதுவுமில்லை. காரணம், அவர் இப்போதுதான் அரசியலுக்கு முழுமையாக வருகிறார்.

- Advertisement -

ஆனால் அரசியல் கட்சியினருக்கு ஏகப்பட்ட பொது விமர்சனங்கள் உள்ளது. குறிப்பாக ஆட்சி செய்தவர்களிடம் ஏகப்பட்ட ஊழல், முறைகேடு குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் டிமிக்கி கொடுத்ததில் அதிமுக, திமுக இரண்டுமே சளைத்தவர்கள் அல்ல என்பது அரசியல் விமர்சனமாக இருந்து வருகிறது.

இந்நிலையில், எந்தவிதமான முன்னறிவிப்பும் இன்றி தனது கட்சி பெயரை அறிவித்து, கெத்து காட்டியிருக்கிறார் விஜய். ஆனால் நடிகர் ரஜினிகாந்த், பல ஆண்டுகளாக ஆண்டவன் சொன்னால் வருவேன், வர வேண்டிய நேரத்துல கரெக்டா வருவேன் என்று டயலாக் பேசிவிட்டு கடைசியில் அரசியலுக்கு வரவில்லை

- Advertisement -

ஒரு கட்டத்தில் அரசியலுக்கு வருகிறேன். கட்சி நிர்வாகத்துக்கு ஒருவர், ஆட்சி நிர்வாகத்துக்கு ஒருவர், நான் அந்த பொறுப்பில் இருப்பவர்களை கண்காணிக்கும் மேற்பார்வையாளராக இருப்பேன். தவறு யார் செய்தாலும் கட்சியை, பதவியை விட்டு தூக்கி விடுவேன் என்றும் பேசிய அவர், திடீரென தமிழகத்தில் புரட்சி வெடித்தால், நான் அரசியலுக்கு வருவேன் என குழப்பி விட்டு போனார்.

ஆனால் ரஜினியை விட 25 வயது சிறியவரான விஜய், துணிச்சலாக அரசியல் களத்தில் இறங்கி விட்டார். இதனால் கடந்த 10 நாட்களாக விஜய்க்கு இருக்கிற துணிச்சலும், வீரமும் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு இல்லையே, என கடும் விமர்சனத்தில் சிக்கியுள்ளார். அதனால் சமீபத்தில் சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த ரஜினியிடம் செய்தியாளர்கள் விஜய் மற்றும் விஷால் அரசியல் குறித்து கேட்ட போது, அரசியல் கேள்விகள் வேண்டாம் என்று கடுப்பாக சொல்லிவிட்டு அங்கிருந்து வேகமாக சென்றுவிட்டார்.

- Advertisement -

சற்று முன்