- Advertisement -
Homeபொழுதுபோக்குமீண்டும் செல்வராகவனுடன் எனக்கு அதற்கு சம்மதம்தான், அவர் கூப்பிட்டா ஓகே - மாஜி மனைவி நடிகை...

மீண்டும் செல்வராகவனுடன் எனக்கு அதற்கு சம்மதம்தான், அவர் கூப்பிட்டா ஓகே – மாஜி மனைவி நடிகை சோனியா அகர்வால் இப்படி சொல்லிட்டாங்களே?

- Advertisement -

இயக்குநர் செல்வராகவன் காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், நானே வருவேன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம், நெஞ்சம் மறப்பதில்லை, உள்ளிட்ட படங்களை இயக்கியவர். இதில் சில படங்கள் தவிர மற்ற படங்கள் எல்லாமே வெற்றிப்படங்களாக அமைந்துள்ளன.

இயக்குநராக மட்டுமின்றி நடிகராகவும் செல்வராகவன் இப்போது மாறிவிட்டார். பீஸ்ட், பகாசூரன், பர்ஹானா, மார்க் ஆண்டனி, நானே வருவேன், சாணிக்காயிதம் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். இயக்குநராக மட்டுமின்றி நடிகராகவும் ரசிகர்களின் மனதில் செல்வராகவன் இடம்பிடித்து விட்டார்.

- Advertisement -

கடந்த 2006ம் ஆண்டில் செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த படம் புதுப்பேட்டை. நடிகர் தனுஷ் கொக்கி குமார் கேரக்டரில் நடித்திருப்பார். நடிகை சினேகா, இந்த படத்தில் விலை மாது கேரக்டரில் நடித்திருந்தார். ரவுடிகளின் அரசியல் வாழ்க்கையை மையப்படுத்திய இந்த படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

புதுப்பேட்டை படத்தில், நண்பனின் தங்கை சோனியா அகர்வால் திருமணத்துக்கு செல்லும் ரவுடி தனுஷ், தாலியை எடுத்து கொடுக்கும்போது சோனியா அகர்வால் கழுத்தில் கட்டி விடுவார். இந்த படத்தில் சினேகா, சோனியா அகர்வால் என இரண்டு பேர் தனுஷ்க்கு ஜோடியாக நடித்திருந்தனர்.

- Advertisement -

காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை என தொடர்ந்து செல்வராகவன் இயக்கிய படங்களில் நடித்த சோனியா அகர்வால், செல்வராகவன் இடையே காதல் ஏற்பட்டு திருமணமும் செய்துக்கொண்டனர். ஆனால் 2010ம் ஆண்டில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர். அதன்பின் செல்வராகவன் மறுமணம் செய்துக்கொண்டார், சோனியா அகர்வால் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், புதுப்பேட்டை 2 படம் இந்த ஆண்டு துவங்கும் என, செல்வராகவன் அறிவித்துள்ளார். இந்த படத்தில் நீங்கள் நடிப்பீர்களா என சோனியா அகர்வாலிடம் கேட்ட போது, புதுப்பேட்டை 2 படத்தில் நடிக்க அழைத்தால் கண்டிப்பாக நடிப்பேன், செல்வாவுடன் சேர்ந்து பணிசெய்வதில் எனக்கு ஒண்ணும் பிரச்னை இல்லை. நடிப்பு என் தொழில். ஆனால் அந்த படத்தில் நடிக்க இதுவரை எந்த அழைப்பும் வரவில்லை. அதில் யார் யார் நடிக்கிறார்கள் என்பதும் எனக்குத் தெரியாது, என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்