நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகராக இருந்து வருகிறார். இன்றைய நிலவரப்படி, சினிமாவில் உச்ச நட்சத்திரமாக அதிக சம்பளம் பெறுகிறவர் விஜய்தான். தமிழில் அவரது படங்கள் மட்டுமே வசூல் சாதனையிலும் முன்னிலையில் இருந்து வருகிறது. எனினும் அடுத்த ஆண்டு இறுதிக்குள் விஜய், சினிமாவில் இருந்து முற்றிலும் விலகி விடுவார்.
விஜய் நடித்த ஆரம்ப கால படங்கள் சிலவற்றில் விஜயுடன் நடித்தவர் சஞ்சீவ். பத்ரி படத்தில், விஜய் நண்பர்களில் ஒருவராக சஞ்சீவ் நடித்திருப்பார். அதுமட்டுமின்றி விஜய்க்கு பர்சனலாக நெருங்கிய நண்பர்களில் சஞ்சீவ் முக்கியமானவர். அவரது வீட்டுக்கு அடிக்கடி செல்வார் விஜய். அதே போல் விஜய் வீட்டுக்கும் எந்த அறிவிப்பும் இல்லாமல் அடிக்கடி வருபவர் சஞ்சீவ்.
சினிமாவை விட சீரியல்களில் அதிகமாக நடிப்பவர் நடிகர் சஞ்சீவ். திருமதி செல்வம் படத்தில் இவரது நடிப்பு மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. மெட்டி ஒலி, நம்பிக்கை, அண்ணாமலை, பணம், ஆனந்தம், அகல்யா, சாரதா, சிவசக்தி, நாணல், மேகலா என பல சீரியல்களில் நடித்திருக்கிறார் சஞ்சீவ். இப்போதும், போலீஸ் கேரக்டரில் சீரியல் ஒன்றில் பிஸியாக நடித்துக்கொண்டு இருக்கிறார்.
நடிகர் சஞ்சீவ் நடிப்பில் அப்படியே விஜயின் பிரதிபலிப்பு தெரிகிறது. சீரியல்களில் நடிக்கும் சஞ்சீவ் பல காட்சிகளில் விஜயின் மேனரிசங்களை அப்படியே பின்பற்றுகிறார். நடப்பது, முறைப்பது, சிரிப்பது, கோபமாக பேசுவது என பல காட்சிகளில் விஜயை போலவே அவர் நடிப்பதால், சின்னத்திரை விஜய் இவர்தான் என்றும் கிண்டலாக கூறி வருகின்றனர்.
இந்நிலையில், சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் சஞ்சீவிடம் இதுகுறித்து கேள்வி கேட்கப்பட்டது. அப்போது பதிலளித்த சஞ்சீவ், விஜயும் ஒருமுறை இதை தான் என்னிடம் கேட்டார். என்னை மாதிரியே நீ நடிக்கறே, வசனம் எல்லாம் என்னை மாதிரியே பேசறே, நீ தினமும் சீரியலில் நடிக்கறே. நான் வருஷத்துக்கு ஒரு படம்தான் பண்றேன். உன்னை பார்த்துதான் நான் காப்பியடிக்கிறேன்னு என்னை திட்டப் போறாங்க, என்று கூறினார்.
இப்படி விஜய் சொன்னதாக குறிப்பிட்டு பேசிய நடிகர் சஞ்சீவ், ஏன் அவர் விஜய் மாதிரி நடிக்கிறார் என்பதற்கு மட்டும் சரியான பதிலை அவர் சொல்லவில்லை. அதே வேளையில் விஜய், என்னை மாதிரியே சீரியலில் நடிக்காதே என ஒரு நண்பனாக எச்சரித்த நிலையிலும், இன்னும் விஜய் பாணியில்தான் சஞ்சீவ் சீரியல்களில் நடித்துக்கொண்டு இருக்கிறார் என்பதும் கவனிக்கத்தக்கது.





