- Advertisement -
Homeபொழுதுபோக்குசோதனை மேல் சோதனையால் நொந்து போன விஜய் - கடைசியில் எம்ஜிஆரும், விஜயை சோதித்ததுதான் பெரிய...

சோதனை மேல் சோதனையால் நொந்து போன விஜய் – கடைசியில் எம்ஜிஆரும், விஜயை சோதித்ததுதான் பெரிய ஹைலைட் – ஓ…காட், இப்படி எல்லாம் நடந்திருக்கா?

- Advertisement -

நடிகர் விஜய், பீஸ்ட் படம் வெளிவந்த போது மிகவும் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். இப்படி ஒரு படத்தில், விஜய் எப்படி நடித்தார் என பலரும் கிண்டலடித்து சிரித்தனர். கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற நல்ல வெற்றிப் படங்களை தந்த இயக்குநர் நெல்சன், எப்படி பீஸ்ட் போன்ற படத்தை எடுக்க முடிந்தது எனவும் கலாய்த்தனர்.

இதையடுத்து, வாரிசு படம் வெளிவந்தது. குடும்ப சீரியல் போன்ற இந்த படமும் விஜய்க்கு பெரிய பின்னடைவாகவே இருந்தது. இதில் அவரது நடிப்பு பல இடங்களில் ரசிகர்களுக்கே பிடிக்காத அளவுக்கு இருந்தது. ஆனால் பீஸ்ட், வாரிசு இரண்டு படங்களுமே விமர்சன ரீதியாக தோல்வி படமாக இருந்தாலும், வசூல் ரீதியாக இந்த படங்கள், தயாரிப்பாளர்களுக்கு லாபத்தையே தந்தன.

- Advertisement -

இந்நிலையில், அடுத்து வந்த விஜய் படம்தான் லியோ. இதுவும் கடுமையான விமர்சனங்களை சந்தித்தாலும், தயாரிப்பாளர்களை, விநியோகஸ்தர்களை பொருத்த வரை மிகப்பெரிய லாபம் தந்த படம்தான். ஆனால், தியேட்டர் ஓனர்களுக்கு தான் வசூல் பங்கு தொகையை வெகுவாக குறைத்து, ஏமாற்றி விட்டனர் என்பது குற்றச்சாட்டாக இருந்து வருகிறது.

தீபாவளி வரை வேறு புதிய படங்களே இல்லாத நிலையில், லியோ படத்தை திரையிடா விட்டால், தியேட்டரை மூட வேண்டிய இக்கட்டான நிலையில், தியேட்டர் உரிமையாளர்கள் லியோ படத்தை திரையிட்டுள்ளனர். பல தியேட்டர்களில் லியோ படம் பார்க்க ஆள் இல்லாமல் காற்று வாங்குகிறது. அதனால், தீபாவளி வரை இந்த படத்தை எப்படி ஓட்டுவது என தியேட்டர் உரிமையாளர்கள் கவலையில் இருக்கின்றனர்.

- Advertisement -

இந்நிலையில், சென்னையில் உள்ள ஒரு பிரபல தியேட்டரில் லியோ படத்துக்கு பதிலாக, கடந்த 1971ல் வெளிவந்த எம்ஜிஆர் நடித்த ரிக்‌ஷாக்காரன் படம் திரையிடப்பட்டுள்ளது. எவர்கிரீன் ஹீரோவான எம்ஜிஆர் படம் என்றவுடன் ரசிகர்கள் கூட்டம் தியேட்டரில் குவிந்துவிட்டது. இது, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, விஜய் கவனத்துக்கும் இது சென்றுவிட்டது.

லியோ படத்தின் தொடர் சோதனைகளால் நொந்து போயிருந்த நடிகர் விஜய், இந்த தகவலை அறிந்ததும், கடைசியில் எம்ஜிஆரும் நம்மை சோதித்து விட்டாரே. இப்படி 52 ஆண்டுகளுக்கு முன்பு வந்த ரிக்‌ஷாக்காரன் படத்தின் முன்னால், லியோ தோல்வி படமாகி விட்டதே என்றும் கவலைப்பட்டு இருக்கிறார். எத்தனை லியோ வந்தாலும், எம்ஜிஆர் படம் எப்பவுமே முன்னால் தான் நிற்கும் என, சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இத்தனைக்கும் காரணம், லோகேஷ் கனகராஜ் சொன்ன அளவுக்கு, படம் இல்லை என்பதே என்றும் எக்ஸ்ட்ரா பிட்டுகளை சேர்த்து போட்டு விடுகின்றனர்.

- Advertisement -

சற்று முன்