டைரக்டர் அமீர் இயக்கிய பருத்திவீரன் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் கார்த்தி. சீனியர் நடிகர் சிவக்குமாரின் இளைய மகன், நடிகர் சூர்யாவின் தம்பி என்ற அடையாளங்களை தாண்டி பருத்திவீரன் கார்த்தி என்ற அடையாளத்தை முதல் படத்திலேயே பெற்றவர் நடிகர் கார்த்தி. அந்த அளவுக்கு இந்த படத்தில் அவரது கேரக்டரை சிறப்பாக கொண்டு வந்திருந்தார் டைரக்டர் அமீர்.
இதுவரை 25 படங்களில் நடித்தும் கூட நடிகர் கார்த்திக்கு எப்போதும் பருத்திவீரன் கார்த்தி தான் என்ற அடைமொழிதான் இருந்து வருகிறது. அவரது 25 வது படம் ஜப்பான் படத்தை, குக்கூ ஜோக்கர் படங்களின் இயக்குனர் ராஜூமுருகன் டைரக்ட் செய்திருந்தார்.
ஆனால் ஜப்பான் படம் கார்த்தி நடித்த படங்களிலேயே மிக மோசமான பிளாப் படமாக அமைந்தது. விஜய்க்கு ஒரு சுறா போல கார்த்திக்கு ஒரு ஜப்பான் என்று சொல்லும் அளவுக்கு இந்த படம் தியேட்டரில் ரசிகர்களை கதறவிட்டது. இந்தியன் 2 கமல் தாத்தாவுக்கு முன்பே ரசிகர்களை கதறவிட்ட பெருமை நடிகர் கார்த்திக்கு உண்டு.
இந்நிலையில் அடுத்து 96 பட இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள மெய்யழகன் படம் வரும் 27ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த படத்திற்கு கோவிந்தா வசந்தா இசையமைத்துள்ளார். நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்த படத்தில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் நாயகி, ஸ்ரீதிவ்யா கதாநாயகியாக நடித்திருக்கிறார். கார்த்திக்கு இணையான இன்னொரு முக்கியமான கேரக்டரில் நடிகர் அரவிந்த் சாமி இந்த படத்தில் நடித்துள்ளார்.
சமீபத்தில் இந்த படத்தின் கிளர்ஓட்டம் அதாவது டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து மெய்யழகன் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இந்த நிகழ்வில் பங்கேற்ற நடிகர் கார்த்தி பேசும்போது, கைதி படத்தில் நடித்தபோது முழுக்க முழுக்க இரவில் தான் படப்பிடிப்பு நடந்தது.கைதி படத்தில் நடித்த போது இரவில்தான் பெரும்பாலும் படப்பிடிப்பு நடத்தப்படட்டது. தொடர்ந்து சண்டை காட்சிகள், சேஷிங் கோட்சிகள் என படத்தின் டைரக்டர் லோகேஷ் கனகராஜ் பெண்டு கழட்டி விட்டார்.
கைதி படத்துக்கு பிறகு முழுக்க முழுக்க இரவு நேர படப்பிடிப்பில் மட்டுமே நான் கலந்து கொண்டது மெய்யழகன் படத்தில்தான். ஆனால் இந்த படத்தில் ஒரு சண்டைக் காட்சி கூட இல்லை. ஆனாலும் இது ஒரு பக்காவான கமர்சியல் படம் என்று கூறியிருக்கிறார். மெய்யழகன் படத்தில் சண்டை காட்சிகளே இல்லை என்ற சஸ்பென்ஸ் விஷயத்தை கார்த்தி இப்படி உளறிக் கொட்டியது படக்குழுவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.





