- Advertisement -
Homeபொழுதுபோக்குஇந்த விஷயத்தில் தனது மாமனார் ரஜினி பாணியை பின்பற்றும் நடிகர் தனுஷ் - எனக்கு ஏதாச்சும்...

இந்த விஷயத்தில் தனது மாமனார் ரஜினி பாணியை பின்பற்றும் நடிகர் தனுஷ் – எனக்கு ஏதாச்சும் கதை இருந்தா சொல்லுங்க!

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்தவர் நடிகர் தனுஷ். இவர் இயக்குநர் கஸ்தூரிராஜாவின் மகன். ரஜினிகாந்தும், கஸ்தூரி ராஜாவும் சம்பந்திகள் என்றாலும், அப்படி ஒரு உறவே வெளியில் தெரியாத அளவுக்குதான் அவர்களது உறவு இருந்து வருகிறது. இவரும் அவரை பற்றி பேச மாட்டார். அவரும் இவரை பற்றி பேசமாட்டார். சினிமா துறையில் இதுவும் ஒரு விதமான போக்காக இருந்து வருகிறது.

தன்னைவிட ஐந்து வயது மூத்தவரான ஐஸ்வர்யாவை தனுஷ் திருமணம் செய்த நிலையில், 17 ஆண்டுகளாக அவர்களது குடும்ப வாழ்க்கை சிறப்பாக தான் இருந்தது. யாத்ரா, லிங்கா என்ற 2 பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் இருவரும் பிரிவதாக டிவிட்டரில் தகவல் பதிவிட்டு பிரிந்து விட்டனர்.

- Advertisement -

இது ரஜினிகாந்த், கஸ்தூரிராஜா என இருவரது பெற்றோர் தரப்பில் மட்டுமின்றி தமிழ் சினிமா துறையினர் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தனுஷ் – ஐஸ்வர்யா பிரிவில் இரு தரப்பினருக்கும் சம்மதம் இல்லாத நிலையில், பலமுறை சமாதானம் செய்தும் இருவரும் அவர்கள் முடிவில் உறுதியாக இருந்து விட்டனர்.

ஆனால் இதுவரை இருவரும் பிரிந்து இருந்தாலும், அவர்களது பிள்ளைகள் இருவரும் ரஜினி வீட்டிலும் இருக்கின்றனர். தனுஷ் வீட்டிலும் இருக்கின்றனர். அம்மா ஐஸ்வர்யாவுடனும் வெளியே செல்கின்றனர். அப்பா தனுஷ் உடனும் வெளியிடங்களுக்கு வருகின்றனர். பிள்ளைகளின் எதிர்கால நலன்கருதி இருவரும் விரைவில் சேர்ந்து விடுவர் எனக் கூறப்படுகிறது. ஏனெனில் அவர்களிடம் விவாகரத்து செய்யும் இதுவரை இல்லை.

- Advertisement -

இந்நிலையில், நடிகர் தனுஷ் குட்நைட் படத்தை இயக்கிய இயக்குநர் விநாயக் சந்திரசேகரிடம் பேசிய நடிகர் தனுஷ், அவரது படங்கள் குறித்து பாராட்டி பேசியிருக்கிறார். அப்போது எனக்கு ஏதாச்சும் கதை இருந்தாலும் சொல்லுங்க, ரெண்டு பேரும் சேர்ந்து பண்ணுவோம். அடுத்த ஜனவரி 2025ல் உங்களுக்கு கால்ஷீட் தருகிறேன் என்றும் அவரிடம் கூறியிருக்கிறார்.

நடிகர் ரஜினிகாந்த் பாணியும் இதுதான். நல்ல படங்கள் திரைக்கு வந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றால், உடனே அந்த பட இயக்குநரை அழைத்து போனில் பாராட்டி பேசுவார். பிறகு, எனக்கு ஏதாச்சும் கதை இருந்தால் சொல்லுங்க என்பார். அப்படித்தான் டாக்டர், கோலமாவு படங்களை இயக்கிய நெல்சன் படத்தில் நடித்தார். விக்ரம் இயக்கிய லோகேஷ் கனகராஜை கமிட் செய்தார். விஸ்வாசம் படம் பார்த்து சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்தே படத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது மாமனார் பாணியில் மருமகன் தனுஷூம் இறங்கி விட்டார்.

- Advertisement -

சற்று முன்