- Advertisement -
Homeபொழுதுபோக்குபார்க்கிங் படத்திலிருந்து வைக்கப்படாத கிளைமாக்ஸ் காட்சியை வெளியிட்ட படக்குழு... இதைப் போய் ஏன் டெலிட் பண்ணாங்க...

பார்க்கிங் படத்திலிருந்து வைக்கப்படாத கிளைமாக்ஸ் காட்சியை வெளியிட்ட படக்குழு… இதைப் போய் ஏன் டெலிட் பண்ணாங்க என ரசிகர்கள் கேள்வி…

- Advertisement -

சிந்து சமவெளி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். மாமனார் மருமகளிடையேயான உறவை, கொச்சைப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் மிகப்பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. நடிகை அமலா பாலுக்கும் இந்த திரைப்படம் தான் தமிழ் சினிமாவில் முதல் படமாக அமைந்தது.

இதனைத் தொடர்ந்து சட்டப்படி குற்றம், சந்த மாமா, பொறியாளன், வில் அம்பு உள்ளிட்ட திரைப்படங்களில் ஹரிஷ் கல்யாண் நடித்தார். ஆனால் இந்த படங்கள் எதுவும் அவருக்கு மிகப்பெரிய அளவில் கை கூடவில்லை. இப்படியான சூழலில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு ஹரிஷ் கல்யாணத்துக்கு கிடைத்தது.

- Advertisement -

அதில் ரசிகர்கள் பலரை சம்பாதித்த ஹரிஷ் கல்யாணத்துக்கு, அங்கிருந்து வெளியே வந்ததும் திரைப்படத்தின் நடிப்பதற்கான வாய்ப்புகள் நிறைய கிடைக்க ஆரம்பித்தன. இதில் பியார் பிரேம காதல், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் ஆகிய திரைப்படங்கள் ஹரிஷ் கல்யாணுக்கு நல்ல பெயரை பெற்று கொடுத்தன.

தொடர்ந்து தாராள பிரபு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வந்த அவருக்கு, மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்தது பார்க்கிங் திரைப்படம். ராம்குமார் பாலகிருஷ்ணன் என்பவர் இயக்கத்தில் எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் ஒன்றாம் தேதி வெளியானது.

- Advertisement -

மலையாளத்தில் எடுக்கப்பட்ட ஐயப்பனும் கோஷியும் படத்தின் கான்செப்ட் மையமாக வைத்தே இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது. ஒரு வீடு, அதில் வாடகைக்கு வசிக்கும் இருவர், அங்கிருக்கும் ஒரே ஒரு கார் பார்க்கிங், அது யாருக்கு சொந்தம் என்பதில் நிலவும் ஈகோ போட்டி என படம் முழுவதும் ஒரு திரில்லர் காட்சியை நமது கண் முன்னே நிறுத்தி இருந்தார் இயக்குனர். படத்தின் ஹரிஷ் கல்யாணும், எம் எஸ் பாஸ்கரும் போட்டி போட்டு நடித்திருந்தனர்.

இப்படியான சூழலில் படத்தின் இறுதியில் நீக்கப்பட்ட காட்சி வெளியாகி உள்ளது. அதில் பாஸ்கரன் குடும்பத்தினர் தங்களது காரில் படத்திற்குச் செல்ல, ஹரிஷ் கல்யாணும் தனது குடும்பத்துடன் திரையரங்கிற்கு செல்கிறார். அப்போது இருக்கும் ஒரே ஒரு பார்க்கில், இருவரும் மோதிக் கொண்டு நேர் எதிரே பார்க்க, அங்கிருந்து திரும்பி செல்வது போல காட்சி அமைக்கப்பட்டு இருந்தது. இது இணையத்தில் வெளியாக, பலரும் அதற்கு லைக் செய்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்