- Advertisement -
Homeபொழுதுபோக்குமூக்குத்தி அம்மன் 2 படப்பிடிப்பில் நடிகை நயன்தாராவுடன் பிரச்னையா? ஒளிவு மறைவின்றி நேரடியாக பதில் சொன்ன...

மூக்குத்தி அம்மன் 2 படப்பிடிப்பில் நடிகை நயன்தாராவுடன் பிரச்னையா? ஒளிவு மறைவின்றி நேரடியாக பதில் சொன்ன இயக்குனர் சுந்தர் சி!

- Advertisement -

இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் கேங்கர்ஸ் படம் வரும் 24ம் தேதி வெளிவர இருக்கிறது. சுந்தர் சி நாயகனாவும் கேத்தரின் தெரசா நாயகியாகவும் நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் வடிவேலு முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு சுந்தர் சி இயக்கத்தில் வடிவேலு இந்த படத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

சுந்தர் சி படங்கள் என்றாலே காதல் காமெடி என ஜாலியான ஜானரில் படம் பொழுதுபோக்காக இருக்கும். நிச்சயமாக இரண்டரை மணி நேரம் ரசிகர்களை மனம் விட்டு சிரிக்க வைக்கும் படமாகவும் இருக்கும். இப்போது நயன்தாரா நடிப்பில் மூக்குத்தி அம்மன் 2 படத்தை டைரக்ட் செய்கிறார். நயன்தாரா படத்தில் நாயகியாக நடிக்கிறார்.

சமீபத்தில் கேங்கர்ஸ் படம் பிரமோசன் நிகழ்ச்சியில் இயக்குனர் சுந்தர் சி நடிகை கேத்தரின் தெரசா பங்கேற்றனர். அப்போது சுந்தர் சி இதுபற்றி கூறியதாவது, அப்படி எல்லாம் எதுவுமே இல்லை. எதனால் அப்படி ஒரு செய்தி பரவியது என்றே தெரியவில்லை. நாங்கள் திட்டமிட்டபடி தான் படப்பிடிப்பு நடந்தது.

பொள்ளாச்சியில்தான் முதலில் ஷூட்டிங் பிளான் பண்ணினோம். அப்போது எனக்கு கேங்கர்ஸ் படத்தில் இன்னும் கொஞ்சம் வேலை இருந்தது. அதனால் பொள்ளாச்சி ஷூட்டிங் 20 நாள் 25 நாள் போய்விட்டால் இந்த வேலை பாதிக்குமே என சென்னையில் ஷூட்டிங் நடத்தினோம்.

நயன்தாரா வெரி டெடிகேடிவ் ஆர்ட்டிஸ்ட் ஆக இருக்கிறார். எனக்கே ஆச்சரியமாக இருந்தது. அரை மணி நேரம் கேப் இருந்தால் லைட்டிங் வேலை இருந்தால் கேரவனுக்கு போங்க என்று நான் சொன்னால் கூட இல்லே சார் என்று சொல்லிவிட்டு லொகேஷனிலேயே ஒரு சேரை போட்டு அமர்ந்து விடுவார்.

காலையில் ஷூட்டிங் வந்தால் நான் பிரேக் சொல்ற வரைக்கும் இல்லே பேக்கப் சொல்ற வரைக்கும் அந்த லொகேஷனை விட்டு நகர்றது கிடையாது. இதற்கும் நாங்கள் ஆக்சன் சீக்குவன்ஸ் எல்லாம் செஞ்சோம். புழுதியாக பறந்த நிலையிலும் அவர் கேரவனுக்குள் செல்லவில்லை. அந்த மாதிரி நியூஸ் வந்தால், எல்லாத்துக்கும் நான் பதில் சொல்லிட்டு இருக்க முடியாது என்று சுந்தர் சி கூறியிருக்கிறார்.

சற்று முன்