- Advertisement -
Homeபொழுதுபோக்குபாலிவுட் நடிகைகள் இந்த கேவலமான வேலையைதான் செய்கிறார்கள் - உண்மையை போட்டுடைத்த நம்மூரு நடிகை பிரியாமணி

பாலிவுட் நடிகைகள் இந்த கேவலமான வேலையைதான் செய்கிறார்கள் – உண்மையை போட்டுடைத்த நம்மூரு நடிகை பிரியாமணி

- Advertisement -

தமிழ் சினிமாவில் நல்ல நடிகையாக ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் பிரியாமணி. கண்களால் கைது செய் என்ற படத்தின் மூலம் அறிமுகமான பிரியாமணி பல படங்களில் நடித்தார். குறிப்பாக மலைக்கோட்டை, நினைத்தாலே இனிக்கும், சாருலதா, ராவணன், தோட்டா, அது ஒரு கனா காலம் போன்ற படங்களில் நடித்தார்.

எனினும், கடந்த 2007ம் ஆண்டில் இயக்குநர் அமீர் இயக்கத்தில் பருத்தி வீரன் படத்தில், முத்தழகு கேரக்டரில் பிரியாமணி நடித்திருந்தார். நடிகர் சிவக்குமார் மகன் கார்த்தி அறிமுகமான இந்த படத்தில், பருத்தி வீரனை காதலிக்கும் முத்தழகு கேரக்டரில் பிரியாமணி வாழ்ந்திருந்தார். இந்த படத்தில் நடித்ததற்காக பிரியாமணிக்கு தேசிய விருது கிடைத்தது.

- Advertisement -

தற்போது தமிழ்பட இயக்குநர் அட்லி இயக்கத்தில், ஷாருக்கான் நடித்த ஜவான் என்ற இந்தி படத்தில் நடிகை பிரியாமணி நடித்திருந்தார். மேலும் இந்த படத்தில் யோகிபாபு, விஜய் சேதுபதி போன்ற தமிழ் நடிகர்களும் நடித்திருந்தனர். ஆனால் படம் 1150 கோடி ரூபாய்க்கு வசூலான நிலையில், அடுத்தடுத்த பட வாய்ப்புகள் இந்தியில் அவர்களுக்கு கிடைக்கவில்லை.

இந்நிலையில், பாலிவுட் நடிகைகள் சிலர் பப்ளிசிடிக்கான செய்யும் கேவலமான விஷயங்கள் குறித்து, நடிகை பிரியாமணி ஒரு நேர்காணலில் வெளிப்படையாக கூறியிருக்கிறார். பிரியாமணி கூறியதாவது, பாலிவுட்டில் பிரபலமாக இருக்கும் நடிகைகள் பப்பராஸி புகைப்படங்களை அவர்கள் போகும் இடங்களுக்கு வரவழைக்கின்றனர். குறிப்பாக விமான நிலையம், ஜிம் போன்றவைகளுக்கு அவர்களை வரவழைத்து புகைப்படங்கள், வீடியோக்கள் எடுக்க வைக்கின்றனர்.

- Advertisement -

பாலிவுட் சினிமாவில் நடித்து வரும் நடிகைகள் பலரும், இந்த வேலையை செய்கின்றனர். அதாவது அவர்கள் செல்லும் இடங்கள் குறித்து முன்பே, ஏஜன்சிகளுக்கு தகவல் சொல்லி விடுகின்றனர். அவர்கள் சொன்ன இடங்களுக்கு போட்டோகிராபர், வீடியோகிராபர்களை அந்த ஏஜன்சிகள் சரியாக அனுப்பி விடுகின்றனர். அவர்கள் அங்கு நடிகைகளை புகைப்படங்கள், வீடியோ எடுத்து விடுகின்றனர்.

பின்னர் அவற்றை ஸ்பாட்டட் என குறிப்பிட்டு தங்களது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு, அதன்மூலம் மிகவும் சீப்பான பப்ளிசிடி தேடிக்கொள்கின்றனர். என்னிடமும் அப்படி செய்து தர வேண்டுமா என கேட்டார்கள். எனக்கு அப்படி ஒரு அவசியம் இல்லை என்று மறுத்துவிட்டேன். இப்படி ஒரு கலாசாரம், தென்னிந்திய சினிமாவிலும் பரவி வருகிறது, என்று பிரியாமணி அதில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்