நடிகர் தனுஷ் தற்போது தெலுங்கு இயக்குனர் சேகர் கமுலா இயக்கத்தில் நடித்து வருகிறார். மும்பையில் தாராவி பகுதியை மையப்படுத்தி இந்த திரைப்படம் எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. தெலுங்கில் வாத்தி திரைப்படத்தை தொடர்ந்து நேரடியாக தனுஷ் நடிக்கும் இரண்டாவது திரைப்படமாக இது எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த திரைப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். மேலும் நாகர்ஜூனுக்கு முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இது திரைப்படத்தின் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இது ஒரு புறம் இருக்க, வரும் ஜூன் மாதம் தனது 52 ஆவது படத்தில் கவனம் செலுத்தி இருக்கிறார் தனுஷ்.
இந்த திரைப்படத்தை ஹெச் வினோத் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது நடுவே தனது ராயன் மற்றும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ்.
இதில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படத்தை அவர் இயக்கியிருக்கிறார். இளம் நடிகர்கள் நடிக்கும் இந்த திரைப்படம் முழுக்க முழுக்க காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட இரண்டே மாதங்களில் இதன் சூட்டிங்கை முடித்திருக்கிறார் தனுஷ். படத்தில் சரத்குமாருக்கு முக்கிய ரோல் இருப்பதாக கூறப்படுகிறது.
இதேபோல் தனது ஐம்பதாவது திரைப்படத்திலும் தனுஷ் கவனம் செலுத்தி வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்தை தனுஷே இயக்கியிருக்கிறார். இதில் எஸ் ஜே சூர்யா, செல்வராகவன், சந்திப் கிஷன், துஷாரா விஜயன், காளிதாஸ் ஆகியோர் நடித்துள்ளனர். ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். அண்மையில் இதன் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் தற்போது ராயல் திரைப்படத்திற்கான ஒன்லைன் கதை வெளியாகி உள்ளது. அதாவது நடமாடும் வாகன உணவகத்தை தனுஷ் தனது சகோதரர்களான சந்திப் கிஷன் மற்றும் காளிதாஸ் ஆகியோருடன் நடத்தி வருவாராம். அப்போது, சில எதிர்பாராத திருப்பங்களால் அவரது பழைய வாழ்க்கை தெரிய வர அடுத்தடுத்து நடக்கும் ஆக்சன் காட்சிகளை படத்தின் கதை என்று கூறப்படுகிறது. ராயல் திரைப்படம் ஜூலை மாதம் திரையரங்குகளில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.





