- Advertisement -
Homeபொழுதுபோக்குதமிழில் முதன் முறையாக பூஜா ஹெக்டே நடித்த படம் இதுவா? 12 ஆண்டு கால சினிமா...

தமிழில் முதன் முறையாக பூஜா ஹெக்டே நடித்த படம் இதுவா? 12 ஆண்டு கால சினிமா பயணத்தில்… – உணர்வுகளை சொன்ன நடிகை பூஜா ஹெக்டே!

- Advertisement -

நடிகை பூஜா ஹெக்டே இந்தியில் தெலுங்கில் பல படங்களில் நடித்திருக்கிறார். இப்போது தமிழிலும் நிறைய படங்களில் நடித்து வருகிறார். ரசிகர்களின் மத்தியில் அவர் மீதான கவனம் அதிகரிக்க துவங்கி விட்டது. அதனால் அவருக்கு தொடர்ந்து தமிழில் முன்னணி ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்பு அமைகிறது.

பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதன்முறையாக நடித்த பூஜா ஹெக்டே இப்போது மீண்டும் நடிகர் விஜய் நடித்துவரும் ஜனநாயகன் படத்திலும் அவருக்கு ஜோடி சேர்ந்திருக்கிறார். இந்த படத்தில் மமிதா பைஜூ அபிராமி பிரியாமணி போன்றவர்கள் இருந்தாலும் பூஜா ஹெக்டே தான் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார்.

அத்துடன் இப்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 44வது படம் ரெட்ரோ. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார். இதில் அவர் வாய் பேசாத கேரக்டரில் அவர் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் அந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

இந்நிலையில் பலரும் பூஜா ஹெக்டே அறிமுகமான முதல் படம் பீஸ்ட் என்று தவறாக கருதியுள்ளனர். ஆனால் தமிழில் அவர் முதன்முறையாக அவர் அறிமுகமான படம் மிஷ்கின் இயக்கிய முகமூடி படம்தான். இந்த படத்தில் நடிகர் ஜீவாவுக்கு பூஜா ஹெக்டே ஜோடியாக நடித்திருந்தார். நரேன் வில்லனாக நடித்திருந்தார். ஆனால் இந்த படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

இன்று இந்தியில் பூஜா ஹெக்டே நடித்த படம் தேவா ரிலீஸாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முகமூடி படம் மூலம் மிஷ்கினால் அறிமுகப்படுத்தப்பட்ட பூஜா ஹெக்டே இன்று தமிழில் இந்தியில் ஒரு முக்கிய நடிகையாக இருந்து வருகிறார். அவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அவர்களுக்கு பூஜா ஹெக்டே நன்றி தெரிவித்து பதிவு செய்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது, என்னுடைய 12 ஆண்டுகால சினிமா பயணம் என்பது ரோலர் ரோஸ்டரில் பயணித்தது போன்ற சவாரி அனுபவத்தை எனக்கு தந்திருக்கிறது. அதில் வரும் ஏற்றம் இறக்கம் சரிவு போல பல வெற்றிகளை தோல்விகளை உயர்வுகளை தாழ்வுகளை நான் பார்த்திருக்கிறேன், என்று அந்த பதிவில் நடிகை பூஜா ஹெக்டே கூறியிருக்கிறார்.

சற்று முன்