- Advertisement -
Homeபொழுதுபோக்குஇனிமே அவர் சொல்ற படங்களில் மட்டும்தான் சூர்யா நடிப்பார், கதை கேட்கப் போறதே அவர்தான் -...

இனிமே அவர் சொல்ற படங்களில் மட்டும்தான் சூர்யா நடிப்பார், கதை கேட்கப் போறதே அவர்தான் – போடு வெடிய, இது தமிழ் சினிமாவுக்கே புதுசுங்க…

- Advertisement -

நடிகர் சூர்யா முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். துவக்கத்தில் சில படங்களில் நடித்த போது, அவரது நடிப்பை ரசிகர்கள் பெரிய அளவில் கவனிக்கவில்லை. மௌனம் பேசியதே, நந்தா படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றார் சூர்யா. இப்போது ஹாலிவுட் மற்றும் பாலிவுட் படங்களில் நடிக்கும் அளவுக்கு பெரிய ஹீரோவாக மாறியிருக்கிறார்.

ஆரம்ப காலத்தில் காக்க காக்க படமும், அடுத்து கஜினி படமும் சூர்யாவை வேற லெவலுக்கு மாற்றியது. அடுத்து பேரழகன், 7ம் அறிவு, சிங்கம் படங்களின் மூலம் முன்னணி நடிகராக உயர்ந்தார் சூர்யா. அவரது தம்பி கார்த்தியும் பருத்தி வீரன் மூலம் மாஸ் ஹீரோவாக அறிமுகமாகி, அவரும் பல படங்களில் நடித்து வருகிறார்.

சூர்யா நடிக்க ஆரம்பிக்க காலகட்டத்தில், அவர் நடிக்கும் படங்களின் கதையை அப்பா சிவக்குமார் கேட்டு முடிவு செய்தார். ஒரு கட்டத்துக்கு பிறகு சூர்யாவின் குடும்ப மேலாளர் தங்கதுரை என்பவர் கதைகளை கேட்டு, முடிவு செய்தார். சூர்யா, ஜோதிகாவை திருமணம் செய்த பிறகு ஜோதிகாவும் சில படங்களின் கதைகளை கேட்டு முடிவு செய்தார்.

இப்படி அப்பா சிவக்குமார், குடும்ப மேலாளர் தங்கதுரை, மனைவி ஜோதிகா கேட்டு ஓகே சொன்ன பல கதைகளில் நடித்தார் நடிகர் சூர்யா. அதில் பல படங்கள் சூர்யாவுக்கு வெற்றிப் படங்களாகவும் அமைந்தன என்பது குறிப்பிடத்தக்கது. ஹரி இயக்கத்தில் சிங்கம் படத்தில் நடித்த பிறகுதான் சூர்யாவின் ஹீரோயிசம் பெரிய அளவில் தமிழ் சினிமாவில் ரீச் ஆனது.

ஒரு கட்டத்தில் ஊரில் இருக்கும் தனது சொந்தபந்தங்களை எல்லாம் அழைத்து வந்து, அவர்களிடம் இயக்குநர்களை கதை சொல்லச் சொல்ல அவர்கள் ஓகே சொன்ன படங்களில் கூட சூர்யா நடித்திருக்கிறார். ஏனெனில், இப்படி பலதரப்பட்ட அனுபவங்களை கொண்டவர்கள் கதை கேட்கும் பட்சத்தில் அந்த படத்தின் பிளஸ், மைனஸ் தெரியும் என்பதும் அதற்கு முக்கிய காரணமாக இருந்திருக்கிறது.

ஆனால் இப்போது பிரபல எழுத்தாளர் ஒருவர்தான் நடிகர் சூர்யா நடிக்கும் படங்களின் கதைகளை முடிவு செய்ய நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். பிரபல எழுத்தாளரான அவரிடம் சென்று இயக்குநர்கள் கதை சொல்ல வேண்டும். அவர் கேட்டுவிட்டு சூர்யாவுக்கு பச்சைக்கொடி காட்டினால், சூர்யாவும் உடனே ஓகே சொல்லி விடுவார். தமிழ் சினிமாவில் இப்படி ஒரு வித்யாசமான நடைமுறையை முதன்முறையாக நடிகர் சூர்யா அறிமுகப்படுத்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்