- Advertisement -
Homeபொழுதுபோக்குராயன் படத்தில் தனுஷிற்கு தங்கையாக நடிப்பது யார் தெரியுமா... படக்குழு வெளியிட்ட போஸ்டரில் குறியீடு வைத்து...

ராயன் படத்தில் தனுஷிற்கு தங்கையாக நடிப்பது யார் தெரியுமா… படக்குழு வெளியிட்ட போஸ்டரில் குறியீடு வைத்து கண்டுபிடித்த ரசிகர்கள்…

- Advertisement -

நடிகர் தனுஷ் இயக்குனராக அறிமுகமான திரைப்படம் பவர் பாண்டி. ராஜ்கிரண் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்த அந்த திரைப்படம், விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பு பெற்றது. இந்த திரைப்படத்தின் மூலம் முதியோர் தங்கள் குடும்பத்தில் இருக்கும் போது அவர்களுக்கு ஏற்படும் பிரச்சனை, அவர்களுக்குள் இருக்கும் காதல் போன்றவற்றை வெளிப்படையாக பேசி நம்மை கவர்ந்திருப்பார் தனுஷ்.

அதிலும் தனது பருவ வயது காதலை தேடி ராஜ்கிரண் செல்லும் காட்சிகளும், ரேவதிக்கும் அவருக்குமான உரையாடல்களும் நிச்சயம் இளைஞர்களின் மனதை கனக்க செய்யும் வகையில் அமைந்தது. தனுஷா இப்படி படத்தை எடுத்திருந்தார் என பலரும் கேள்வி கேட்கும் அளவிற்கு பவர் பாண்டி இருந்தது.

- Advertisement -

இந்த திரைப்படத்தை தொடர்ந்து நாகர்ஜூனா எஸ்.ஜே சூர்யா ஆகியோரை வைத்து அடுத்த திரைப்படத்தை இயக்க திட்டமிட்டார் தனுஷ். இதற்கான சூட்டிங் பணிகளும் தொடங்கிய நிலையில் பல்வேறு காரணங்களால் அது தடைப்பட்டு போனது. இதனால் கொஞ்ச காலத்திற்கு தனது இயக்குனர் பணியை மூட்டை கட்டி ஒதுக்கி வைத்தார் தனுஷ்.

இப்படியான சூழலில் தான் தனது ஐம்பதாவது படத்திற்காக மீண்டும் அவர் இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கிறார். இந்த திரைப்படத்தில் அவரே இயக்கி கதாநாயகனாகவும் நடிக்கிறார். இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார்.

- Advertisement -

படத்திற்கு ராயன் என தலைப்பு வைக்கப்பட்டுள்ள நிலையில் ஒரே கட்டமாக சூட்டிங்கை நடத்தி முடித்து பலரையும் ஆச்சரியப்பட வைத்தார் தனுஷ். அதன் பிறகு படம் குறித்த எந்த ஒரு தகவலும் வெளியாகாமல் இருந்த சூழலில், தனுசும் அடுத்ததாக நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்னும் திரைப்படத்தை இயக்கச் சென்றார். இப்படியான சூழலில் ராயன் திரைப்படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்டை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டு வருகிறது.

முதலில் தனுஷ் சந்திப் கிஷன் காளிதாஸ் ஆகியோர் சேர்ந்து இருக்கும் போஸ்டர் வெளியாக இருந்தது. பிறகு எஸ் ஜே சூர்யா செல்வ ராகவன் ஆகியோர் போஸ்டர்களும் வெளியாகி இருந்த நிலையில் தற்போது துஷாரா விஜயன் படத்தில் இடம்பெற்று இருப்பதை அறிவித்து போஸ்டர் வெளியாகி உள்ளது. அதில் கழுத்தில் ருத்ராட்ச கையுடன் அவர் காட்சியளிக்கிறார். இதேபோல் தனுஷும் படத்தில் ருத்ராட்சம் கட்டி இருந்தார. இதனால் நிச்சயமாக இருவரும் அண்ணன் தங்கை கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். இதேபோல் துஷாரா விஜயனுக்கு ஜோடியாக காளிதாஸ் நடித்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

சற்று முன்