தமிழ் சினிமாவில் ஏராளமான படங்களில் நடித்தவர் எம்ஜிஆர். ஆனால் இளம் வயதில் அவர் பெரும்பாலும் அதிகளவில் நாடகங்களிதான் நடித்தார். பிறகுதான் அவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. முதலில் கப்பு வெள்ளை படங்களில் அதிகமாக நடித்த எம்ஜிஆர் அதன்பிறகு கலர் படங்களில் நடித்தார்.
எனினும் 55 வயதுகளை கடந்த நிலையில் எம்ஜிஆர் பல படங்களில் நடித்த போது தொடர்ந்து மேக்கப் போட்டு ஷூட்டிங் ஸ்பாட்டில் பிரகாசமான விளக்குகளின் வெளிச்சத்தில் பல ஆண்டுகளாக நடித்த காரணத்தால் முகத்தில் சுருக்கமும் முதுமையின் அறிகுறிகளும் தெரிய ஆரம்பித்து விட்டன.
இப்படி எம்ஜிஆருக்கும் முதுமையின் அடையாளங்கள் தோன்றிய காலகட்டத்தில் அவர் தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து வந்தார். கடந்த 1973ம் ஆண்டில் எம்ஜிஆர் சொந்தமாக தயாரித்து அவரே டைரக்ட் செய்த படம்தான் உலகம் சுற்றும் வாலிபன். இதில் தாய்லாந்து நடிகை மேட்டா ரூங்நாத் என்பவரும் நடித்திருந்தார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்த போது எம்ஜிஆரை பார்த்த நடிகை மேட்டா ரூங்நாத் இவரா ஹீரோ? பார்த்தால் மிகவும் வயதானவர் போல இருக்கிறாரே என்று வெளிப்படையாக சத்தமாகவே சொல்லி விட்டார். இதைக்கேட்டு அங்கு இருந்தவர்கள் பதறிப் போய்விட்டனர். இந்த தகவல் அடுத்த சில நிமிடங்களில் எம்ஜிஆரின் கவனத்துக்கும் போய்விட்டது.
அதன்பிறகு எடுக்கப்பட்ட காட்சியில் வேகமாக ஓடும் எம்ஜிஆரை அந்த நடிகை மேட்டா ரூங்நாத் துரத்தி பிடிக்க வேண்டும். எம்ஜிஆர் மிக வேகமாக ஓட அந்த நடிகை பின்னால் துரத்திக்கொண்டு ஓட எம்ஜிஆரை நெருங்கவே முடியவில்லை. அப்போதுதான் எம்ஜிஆர் வலிமையாகவும் இளமையாகவும் இருக்கிறார் என்பதை அந்த நடிகை தெரிந்துக்கொண்டுள்ளார்.
அதன்பிறகு எம்ஜிஆரிடம் வந்த நடிகை மேட்டா ரூங்நாத், உங்களை பற்றி தெரியாமல் தவறாக பேசிவிட்டேன் என்று கூறி மன்னிப்பும் கேட்டிருக்கிறார். தலைவர் எம்ஜிஆர் தன்னை பற்றி உருவக்கேலி செய்த நடிகைக்கு வார்த்தையால் பதிலடி தராமல் தனது செயலாமல் தக்க பதிலடி தந்த இந்த தரமான சம்பவம் இன்றும் பேசப்படும் ஒரு தகவலாக உள்ளது.





