- Advertisement -
Homeபொழுதுபோக்குதமிழ் சினிமாவில் அம்மா நடிகைக்கு வந்த பஞ்சம் - டைரக்டர் பாலா இயக்கத்தில் அம்மா நடிகையாக...

தமிழ் சினிமாவில் அம்மா நடிகைக்கு வந்த பஞ்சம் – டைரக்டர் பாலா இயக்கத்தில் அம்மா நடிகையாக அறிமுகமான பிரபல நடிகரின் முன்னாள் மனைவி

- Advertisement -

தமிழ் சினிமாவில் கதாநாயகன், கதாநாயகி என்றாலே அவர்களுக்கு அம்மா, அப்பா கேரக்டரில் நடிக்க துணை நடிகர், நடிகைகள் மிக அவசியமாக இருக்கிறது. அதுவும் அப்பா கேரக்டரில் நடிக்க சத்யராஜ், இளவரசு, பட்டிமன்ற நடுவர் ஞானசம்பந்தன், வேல ராமமூர்த்தி, ராஜா, பிரகாஷ் ராஜ், ஆர் சுந்தர்ராஜன் உள்ளிட்ட பல நடிகர்கள் இருக்கின்றனர்.

அதே போல் தமிழ் சினிமாவில் அம்மா கேரக்டர்களில் நடிக்கவும் சில நடிகைகள் இருக்கின்றனர். உமா பத்மநாபன், ஸ்ரீ ரஞ்சினி, ரோகிணி, நளினி, சரண்யா பொன்வண்ணன், துளசி, லதா, ராதிகா, லட்சுமி ராமகிருஷ்ணன், ஊ்ர்வசி, பிரவீனா, நதியா, ரேகா, குயிலி, சத்யப்பிரியா போன்றவர்கள் இருக்கின்றனர்.

- Advertisement -

இருந்தாலும் சிலர் அதிக வயதானவர்களாக தெரிவதால் அம்மா நடிகைக்கு தமிழ் சினிமாவில் டிமாண்ட் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் சிலர் டிவி சீரியல்களில் நடிப்பதால் குறிப்பிட்ட படங்களில் நடிக்க அவர்களால் முடிவதில்லை. அதிலும் வெளியூரில் அவுட்டோரில் ஷூட்டிங் செல்வதை முதுமை காரணமாக தவிர்க்கின்றனர்.

நடிகர் சரத்குமார், நடிகை ராதிகாவை திருமணம் செய்துள்ளார். சரத்குமாரின் முதல் மனைவி பெயர் சாயா தேவி. சரத்குமார் – சாயாதேவி காதல் திருமணம் செய்துக்கொண்டனர். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இதில் ஒரு மகள்தான் வரலட்சுமி. அவர்தான் படங்களில் நடித்து வருகிறார். மற்றொரு மகள் நடிப்பது இல்லை,

- Advertisement -

இந்நிலையில் டைரக்டர் பாலா இயக்கும் வணங்கான் படத்தில் நடிகர் சரத்குமாரின் முன்னாள் மனைவி, சாயாதேவி நடித்திருக்கிறார். இந்த படத்தில் அவர் அம்மா கேரக்டரில் அவர் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே வரலட்சுமி, டைரக்டர் பாலா இயக்கத்தில் தாரை தப்பட்டை என்ற படத்தில் நடித்திருந்தார். இப்போது அவரது அம்மா சாயாதேவி, வணங்கான் படத்தில் நடித்திருக்கிறார்.

நடிகர் சரத்குமாரின் மனைவி சாயாதேவி, பார்ப்பதற்கு மிக அழகாக இருப்பார். அதனால் அழகான அம்மா கேரக்டரில் நடிக்க, தமிழ் சினிமாவுக்கு மீண்டும் ஒரு அம்மா நடிகை கிடைத்துவிட்டார். அதுவும் முதல் படத்திலேயே டைரக்டர் பாலா படத்தில் நடிப்பதால், சாயாதேவி தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் நாட்களில் சரத்குமாருக்கு ஜோடியாக நடிக்கவும் வாய்ப்புள்ளது.

- Advertisement -

சற்று முன்