- Advertisement -
Homeபொழுதுபோக்குசூர்யா என்றால் நான் உடனே ஓகே சொல்லி விட வேண்டுமா, அந்த வேலை எல்லாம் என்கிட்ட...

சூர்யா என்றால் நான் உடனே ஓகே சொல்லி விட வேண்டுமா, அந்த வேலை எல்லாம் என்கிட்ட நடக்காது – பில்டப் செய்த பிரபல நடிகை

- Advertisement -

நடிகர் சூர்யா, துவக்கத்தில் நடிகர் சிவக்குமார் மகன் என்ற அடையாளத்துடன் சினிமாவுக்குள் நுழைந்தவர். துவக்கத்தில் சற்று தடுமாறியதால் ரசிகர்கள் மத்தியில் கிண்டலுக்கு ஆளானார். ஸ்கூல் பையன் மாதிரி இருக்கிறார் என்ற விமர்சனமும் வந்தது. ஆனாலும் தன்னை நாயகனாக்கி கொள்ள சூர்யா மெனக்கெட்டார்.

அமீர் இயக்கத்தில், மௌனம் பேசியதே படம் சூர்யாவுக்கு நடிகர் என்ற அடையாளத்தை பெற்றுத் தந்தது. இந்த படத்தில் சூர்யாவுடன் திரிஷாவும் நடித்திருந்தார். படம் பெரிய அளவில் பேசப்பட்டது. இதையடுத்து டைரக்டர் பாலா இயக்கத்தில் சூர்யா நடித்த நந்தா, ஹீரோவாக அவரை அடையாளப்படுத்தியது.

- Advertisement -

தொடர்ந்து பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக மாறி, ஆக்‌ஷன் ஹீரோவாக அவதாரம் எடுத்த சூர்யா, இப்போது பாலிவுட் படத்தில் நடிக்க கமிட் ஆகியிருக்கிறார். ஆங்கில படம் ஒன்றிலும் சூர்யா நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என அவரது சினிமா பயணம் வேற லெவலில் இருந்து வருகிறது.

சூர்யா நடித்த கங்குவா படம் விரைவில் வெளியாக இருக்கிறது. சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவான இந்த படம், மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சூர்யா படத்தில், இந்த படம் குறிப்பிடத்தக்க திருப்புமுனையை ஏற்படுத்தும். படத்துக்கு பல விருதுகள் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

- Advertisement -

இதையடுத்து நடிகர் சூர்யா, சுதா கொங்காரா இயக்கத்தில் புறநானூறு என்ற படத்தில் நடிக்கிறார். சுதா கொங்காரா ஏற்கனவே சூர்யா நடித்த சூரரைப் போற்று படத்தை டைரக்ட் செய்தவர். இந்த படம் பெரிய வெற்றியை பெற்றது என்பதால், புறநானூறு படத்துக்கும் இப்போதே இமேஜ் ஏற்பட்டுள்ளது. ரசிகர்களின் படத்தை பற்றிய அப்டேட்டுகளை எதிர்பார்த்திருக்கின்றனர்.

சுதா கொங்காரா இயக்கும் படத்தில் நடிக்க நடிகை ராஷ்மிகா மந்தானாவிடம் பேசியுள்ளனர். ஏற்கனவே வாரிசு, சுல்தான் படங்களில் நடித்த வகையில், பெரிய அளவில் தமிழ் ஆடியன்ஸ் மத்தியில் உங்களுக்கு ரீச் கிடைக்கவில்லை. இந்த படம் உங்களுக்கு மிகப்பெரிய ரீச் கொடுக்கும். ஏனெனில் இது சூர்யா படம் என்றும் கூறியுள்ளனர். சூர்யா என்றால் நான் உடனே ஓகே சொல்லி விட வேண்டுமா, என் சம்பளம் 3 கோடி ரூபாய் என்றால் நடிக்கிறேன், என்று கூறியிருக்கிறார். சம்பளத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த படக்குழு, பின்வாங்கி விட்டது.

- Advertisement -

சற்று முன்