- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகைகளிடம் பிரச்னை செய்யும் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா, அவருடன் 4 படங்களில் நடித்த நயன்தாரா...

நடிகைகளிடம் பிரச்னை செய்யும் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா, அவருடன் 4 படங்களில் நடித்த நயன்தாரா – அட இப்படி ஒரு சீக்ரட் இருக்குதா?

- Advertisement -

தமிழ் சினிமாவுக்கும், தெலுங்கு சினிமாவுக்கும், இந்தி சினிமாவுக்கும் நிறைய வித்யாசங்கள் இருக்கின்றன. அது படங்களில் மட்டுமல்ல, அந்த திரையுலக பழக்கவழக்கங்களிலும் பல வித்யாசங்களை அறிய முடியும். ஒவ்வொரு மொழியிலும் ஒவ்வொரு விதமான படங்களை ரசிகர்கள் விரும்பி ரசிப்பார்கள்.

அந்த வகையில் தமிழ் சினிமாவில், ஹீரோயிசம், சென்டிமென்ட், காதல் படங்கள் நல்ல வெற்றியை பெறும். அதே போல் தெலுங்கில் நினைத்தே பார்க்க முடியாத அளவுக்கு மாஸ் ஹீரோயிசம், நடிகைகள் கவர்ச்சி, குத்தாட்ட நடனம் பெரிய அளவில் ரசிகர்களால் வரவேற்பை பெறும். பாலிவுட்டில் வாரிசு நடிகர், நடிகைகளுக்கு முன்னுரிமை, கவர்ச்சி, படுக்கையறை காட்சிகள் அதிகமாக வரும்.

- Advertisement -

இந்த நிலையில்தான் தமிழ், தெலுங்கு, இந்தி சினிமா உலகங்கள் இருந்து வருகின்றன. தமிழ் சினிமாவை பொருத்த வரை திறமை இருந்தால் ஜெயிக்கலாம். இதில் யாரும் விதிவிலக்கு கிடையாது. அதே நேரத்தில் வாரிசு நடிகராக, நடிகையாக இருந்தாலும், ரசிகர்கள் ஏற்றுக்கொண்டால்தான் தொடர்ந்து சினிமாவில் நீடித்திருக்க முடியும். இல்லையென்றால் ஒன்றுமே செய்ய முடியாது.

ஆனால் இந்தியில், தெலுங்கு சினிமாவில் அப்படியல்ல. பிற மொழிகளை சேர்ந்த நடிகர், நடிகைகள் அங்கு சென்று அவ்வளவு எளிதாக ஜெயித்து விட முடியாது. அங்கு வாரிசு அரசியலை போல, வாரிசு சினிமா இருக்கிறது. அதிலும் தெலுங்கில் சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா, நாகார்ஜூனா, என்டி ராமாராவ் என குறிப்பிட்ட குடும்ப வாரிசுகளே ஹீரோக்களே நீடித்திருக்க முடியும்.

- Advertisement -

அதிலும் தெலுங்கு ஹீரோ நடிகர் பாலகிருஷ்ணா என்கிற பாலய்யா மிகப்பெரிய அளவில் தெலுங்கு சினிமாவில் மாஸ் காட்டி வருபவர். சமீபத்தில் கூட கேங்ஸ் ஆப் கோதாவரி படத்தின் ப்ரி ரிலீஸ் நிகழ்ச்சியை நடிகை அஞ்சலியை தள்ளிவிட்டு சர்ச்சையை கிளப்பியவர். பிக்பாஸ் விசித்ரா கூட மறைமுகமாக இவர் மீது ஒரு புகாரை கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் பாலகிருஷ்ணாவை பொருத்த வரை சக நடிகர், நடிகைகளை மதிக்க மாட்டார். குறிப்பாக நடிகைகளிடம் அவர் வரம்பு மீறி நடந்துக்கொண்டாலும் அதைப்பற்றி யாரும் புகாரோ, குற்றச்சாட்டோ எங்கும் சொல்ல முடியாது என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் நடிகை நயன்தாரா 4 படங்களில் பாலகிருஷ்ணாவுடன் நடித்திருக்கிறார். இதுகுறித்து சினிமா பத்திரிகையாளர் அந்தணன் ஒரு நேர்காணலில் கூறுகையில், பாலகிருஷ்ணாவை நேரில் பார்த்தவுடன் அவரது காலில் விழுந்து கும்பிட்டு ஆசிர்வாதம் பெற்றுவிட்டால் போதும், அதன்பிறகு அவர் ஷூட்டிங்கில் எந்த பிரச்னையும் செய்யாமல் நடித்து விட்டு போய்விடுவார். அவர்களிடம் எந்த வம்புமே செய்ய மாட்டார் என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்