- Advertisement -
Homeபொழுதுபோக்குஇப்படியா செய்வாங்க… நடிகை நயன்தாரா மீது மீண்டும் எழுந்த சர்ச்சை - ஏம்பா… ரசிகர்களை மதிக்கவே...

இப்படியா செய்வாங்க… நடிகை நயன்தாரா மீது மீண்டும் எழுந்த சர்ச்சை – ஏம்பா… ரசிகர்களை மதிக்கவே மாட்டாங்களா?

- Advertisement -

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ளார். லேடி சூப்பர் ஸ்டார் என்றும் அழைக்கப்படுகிறார். கடைசியாக அவர் நடித்த 75வது படம் அன்னபூரணி வெளியானது. இந்த படம் போதிய வரவேற்பை ரசிகர்களிடம் பெறவில்லை. இதில் ஜெய் சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இந்த நிலையில் அடுத்ததாக நயன்தாரா நடிப்பில் மண்ணாங்கட்டி டெஸ்ட் உள்ளிட்ட படங்கள் வெளிவர இருக்கின்றன. இதில் டெஸ்ட் படம் ஓடிடியில் ரிலீஸாகும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதே போல் மூக்குத்தி அம்மன் படமும் 2ம் பாகமாக உருவாகிறது. சுந்தர் சி இந்த படத்தை டைரக்ட் செய்கிறார்.

- Advertisement -

நடிகை நயன்தராா எப்போதுமே ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கி விடுகிறார். அதனால் அடிக்கடி அவரைப் பற்றிய சர்ச்சையான விஷயங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. ஆரம்பத்தில் சிம்புவுடன் காதல், பிறகு பிரபுதேவாவுடன் காதல் என்ற கிசுகிசுவில் சிக்கினார். பிறகு அதை அவரே ஒரு கட்டத்தில் ஒப்புக்கொள்ளவும் செய்தார்.

பிறகு ஷூட்டிங் ஸ்பாட்டுகளில் அவரது அலப்பரை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் அவரது திருமண ஆல்பம் அடங்கிய ஆவணப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. இதில் தனுஷ் தயாரித்த நானும் ரவுடிதான் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட காட்சிகளை பயன்படுத்தியதாக புகார் எழுந்தது.

- Advertisement -

இந்த விவகாரத்தில் தயாரிப்பாளர் தனுஷிடம் நயன்தாரா அனுமதி பெறாமல் அந்த காட்சிகளை பயன்படுத்தியதாக, ரூ. 10 கோடி நஷ்ட ஈடு கேட்டு நயன்தாரா மீது தனுஷ் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது. வருகிற 24ம் தேதி மீண்டும் அந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது.

நடிகை நயன்தாரா, பெமி 9 என்ற நிறுவனத்தை துவங்கி சானிடரி நாப்கின் உள்ளிட்ட பெண்கள் அழகு சாதன உபயோக பொருட்கள் பிஸினஸ் செய்து வருகிறார். இதில் சமீபத்தில் கல்லூரியில் பெமி 9 விழா நடந்துள்ளது. இதில் காலை 9 மணிக்கு வருவதாக சொன்ன நயன்தாரா, பிற்பகல் 3 மணிக்கு விழாவுக்கு வந்திருக்கிறார். அதாவது 6 மணி நேரம் தாமதமாக வந்த அவரை காண ரசிகர்களும் கலைந்து போகாமல் காத்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்