அசுரன் திரைப்படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் அடுத்ததாக வாடிவாசல் திரைப்படத்தை சூர்யாவை வைத்து இயக்க இருந்தார். ஆனால் அப்போதைய நேரத்தில் நடிகர் வேறு திரைப்படங்களில் பிஸியாக இருந்ததால், அந்த சிறிய இடைவேளையில் ஒரு படத்தை எடுத்து விடலாம் என முடிவு செய்தார் வெற்றிமாறன்.
இதற்காக அவர் தேர்ந்தெடுத்த கதைக்களம் தான் விடுதலை. இதன் மூலம் நகைச்சுவை நடிகர் சூரியை கதாநாயகனாக முடிவு செய்தார் வெற்றிமாறன். சத்தியமங்கலம் வனப்பகுதியில் சூட்டிங் எடுக்க முடிவு செய்து, சிறிய பட்ஜெட்டில் படத்தை எடுத்து விடலாம் என்று களத்தில் அவர் இறங்கினார்.
படத்தில் வரும் பெருமாள் வாத்தியார் கதாபாத்திரத்திற்கு அவர் இயக்குனர் பாரதிராஜாவை தேர்வு செய்திருந்தார். ஆனால் வனப்பகுதியில் சூட்டிங் போது சில சவாலான தருணத்தை எதிர்கொள்ள வேண்டும் என்பதால் பாரதிராஜாவால் அதில் நடிக்க முடியாமல் போனது. இதனைத் தொடர்ந்து அந்த கேரக்டருக்கு விஜய் சேதுபதி வந்தார்.
தொடர்ந்து சூட்டிங் பணிகளை ஆரம்பிக்க, படத்திற்கான கதையோட்டத்தை இன்னும் அதிகப்படுத்த விரும்பிய வெற்றிமாறன், விடுதலையை இரண்டு பாகமாக எடுத்த திட்டமிட்டார். இதில் முதல் பாகம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியானது. இதில் முழுக்க முழுக்க சூரி மற்றும் அவரை சுற்றி நடக்கும் வகையில் காட்சிகள் இடம்பெற்று இருந்தன.
தனது எதார்த்தமான நடிப்பிலும் பட்டையை கிளப்பி இருந்தார் சூரி. மறுபக்கம் விஜய் சேதுபதி நடித்த பெருமாள் வாத்தியார் கதாபாத்திரம் குறித்து சின்ன சின்ன தகவல்களை நமக்கு கூறி இருந்தார் வெற்றிமாறன். இறுதியாக, கைது செய்யப்படுவது போல் முதல் பாகம் முடிந்து இருந்தது. தற்போது இரண்டாம் பாகத்தை வெற்றிமாறன் எடுத்து வருகிறார்.
இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்திருக்கிறார். சமீபத்தில் ரோட்டர்டாமில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் திரையிடப்பட்டு ரசிகர்களிடம் பாராட்டை பெற்றது. இப்படியான சூழலில் படத்திற்காக விஜய் சேதுபதி கொடுத்த கால்சீட் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது விடுதலை படத்தில் இரண்டாம் பாகத்தில் நடிக்க வெறும் எட்டு நாட்கள் தான் விஜய் சேதுபதி கால்சீட் கொடுத்திருந்தாராம். ஆனால், படத்திற்கான கதையோட்டத்தை வெற்றிமாறன் ஆழப் படுத்த விரும்ப, விஜய் சேதுபதியின் கால்ஷீட் மட்டும் 100 நாட்கள் வரை நீடிக்கப்பட்டுள்ளதாம். இதைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் என்ன 8ல் இருந்து 100 நாட்களா என்று ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.





