- Advertisement -
Homeபொழுதுபோக்குஅம்பானி வீட்டு திருமணம், மீண்டும் சர்ச்சையில் சிக்கிய நடிகர் ரஜினிகாந்த், வைரலாகும் வீடியோ

அம்பானி வீட்டு திருமணம், மீண்டும் சர்ச்சையில் சிக்கிய நடிகர் ரஜினிகாந்த், வைரலாகும் வீடியோ

- Advertisement -

 

நடிகர் ரஜினிகாந்த் இந்திய அளவில் மிக புகழ்பெற்ற ஒரு மனிதராக இருக்கிறார். எந்த விவிஐபி வீட்டு விசேஷம் என்றாலும், அதில் நடிகர் ரஜினிகாந்த் குடும்பத்துடன் பங்கேற்க நிச்சயம் அழைப்பு வந்துவிடும். சமீபத்தில் கூட அயோத்தியில் நடந்த ராமர்கோவில் பிரதிஷ்டை விழாவில் நடிகர் ரஜினிகாந்த் குடும்பத்துடன் பங்கேற்றார்.

- Advertisement -

உலக பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி வீட்டுத் திருமணம் நடைபெற்று வருகிறது. ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சண்ட் ஆகியோரின் திருமணத்தையொட்டி, கொண்டாட்டங்கள் களை கட்டி வருகின்றன. தினமும் நட்சத்திர கலை விழாவாக, மும்பானி இல்லம் களை கட்டியுள்ளது.

சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள், உலக பணக்காரர்கள், அரசியல் பிரபலங்கள் என தினமும் ஏராளமான விவிஐபிகள் தினமும் அம்பானி வீட்டில் குவிந்து வருகின்றனர். அவர்கள் ஆடம்பரமான விருந்தும், தடபுடலான வரவேற்பும் நடந்து வருகிறது. தினமும் அம்பானி வீட்டில் திருவிழா போல திருமண விழா கொண்டாட்டம் மாறி வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தன் மனைவி, மகளுடன் அம்பானி வீட்டு திருமணத்தில் கலந்துக்கொள்ள சென்றிருக்கிறார். அப்போது அவரை புகைப்படம் எடுக்க நிற்கச் சொல்கின்றனர். அப்போது அவர்களுடன் பெரிய பேக் ஒன்றை தூக்கிக்கொண்டு ஒரு பெண்ணும் வருகிறார். அவரை ரஜினிகாந்த், எங்கள் அருகில் நிற்காதே போ போ என விரட்டுகிறார். அந்த பெண் உடனே அந்த இடத்தை விட்டு நகர்ந்து விடுகிறார்.

அதேபோல் சில ஆண்டுகளுக்கு முன் சினிமா தியேட்டரில் ரஜினிகாந்த் குடும்பத்துடன் அமர்ந்து படம் பார்க்கிறார். அவரது பேரன், மனைவி லதா ரஜினிகாந்த் உள்ளிட்டோர் அருகில் அமர்ந்திருக்கின்றனர். ஆனால் அவர்களுக்கு பின்னால், அவர்கள் வீட்டு பெண்மணி நின்றபடி இருக்கிறார். அதாவது அவர் அமர்ந்து படம் பார்க்க அனுமதியில்லை என்பதாக சில ஆண்டுகளுக்கு முன் ரஜினிகாந்த் சர்ச்சையில் சிக்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தன் வீட்டில் பணிபுரியும் பெண்ணாக இருந்தாலும், அவருக்கு உண்டான ஒரு மரியாதையை தர வேண்டும். அவரை தங்களது எடுபிடி வேலைகளுக்காக தான், வெளியூர்களுக்கு செல்லும்போது உடன் அழைத்துச் செல்கின்றனர். அதில் ஒன்றாக நின்று புகைப்படம் எடுக்கும் போது அவரும் நிற்பதால் எந்தவிதமான மரியாதை குறைவும் ரஜினிக்கு ஏற்பட போகாது. ஒரு ரசிகையாக கூட அவரை நிற்க வைத்திருக்கலாம். இப்படியா ரஜினி நடந்துக்கொள்வது என நெட்டிசன்கள் வசைபாடி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்