- Advertisement -
Homeபொழுதுபோக்குஎனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க, ரஜினிகாந்த் கோரிக்கையை நிராகரித்த கமல்ஹாசன் - அட இப்படி ஒரு...

எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க, ரஜினிகாந்த் கோரிக்கையை நிராகரித்த கமல்ஹாசன் – அட இப்படி ஒரு சம்பவம் நடந்ததே தெரியாம போச்சே?

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார். 73 வயதிலும் ஹீரோயிசம் சார்ந்த கேரக்டரில் நடித்து அசத்தி வருகிறார். அவரது காலகட்டத்தில் நடிக்க வந்த பல நடிகர்கள் அப்பா கேரக்டர்களில், தாத்தா கேரக்டர்களில் நடித்துக்கொண்டிருக்க ரஜினி மட்டும், கெத்தாக 100 ரவுடிகளை பந்தாடி கொண்டிருக்கிறார். இன்னும் நான்தான் கிங்கு என்றும் வசனம் பேசிக்கொண்டு இருக்கிறார்.

அதே போல், நடிகர் கமல்ஹாசனும் உலகநாயகன் என்ற பட்டத்துடன் தமிழ் சினிமாவை கலக்கிக்கொண்டு இருக்கிறார். இந்திய சினிமா வரலாற்றில், கமல்ஹாசன் ஒரு தவிர்க்க முடியாத கலைஞனாக எப்போதோ தன்னை நிரூபித்து விட்டார். அரசியல் வாழ்க்கையில், தனிப்பட்ட வாழ்க்கையில் ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் கலையுலகில், கமலுக்கு நிகரான ஒரு கலைஞனை யாரும் சொல்லி விடவே முடியாது.

- Advertisement -

கமல் சினிமாவில் நடித்து ஒரு பெரிய ஸ்டாரான காலகட்டத்தில், ரஜினி நடிக்க வந்தார். அப்போது மூன்று முடிச்சு படத்தில் கமல், ரஜினி, ஸ்ரீதேவி மூன்று பேருமே நடித்தனர். அந்த படத்தில் நடித்ததற்காக கமல் வாங்கிய சம்பளம் ரூ. 30 ஆயிரம், ஸ்ரீதேவி பெற்ற சம்பளம் ரூ. 5 ஆயிரம், ரஜினிகாந்த் சம்பளம் ரூ. 2 ஆயிரம். கமல் போல நானும் கைநிறைய சம்பளம் வாங்குவேனா, என ஆதங்கமாக ஸ்ரீதேவியிடம் ரஜினி கேட்டிருக்கிறார். இதை பல ஆண்டுகளுக்கு முன் ஸ்ரீதேவியே ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார்.

கடந்த 1980, 90களில் ரஜினி, கமல் படங்களுக்கு இன்றைய அஜீத், விஜய் படங்களை போல போட்டி இருந்தது உண்மைதான். அது ஆரோக்கியமான போட்டியாக மட்டுமே இருந்தது. அதே நேரத்தில் அன்றுமுதல் இன்று வரை ரஜினி படத்தை பார்த்துவிட்டு முதலில் பாராட்டுவது கமலாகவும், கமல் படத்தை பார்த்துவிட்டு முதலில் பாராட்டுவதும் ரஜினியாகவும் தான் இருந்து வருகின்றனர். நண்பர்கள், சகோதரர்களை காட்டிலும் அவர்களுக்குள் ஒரு நெருக்கமான உறவும், உணர்வும் உண்டு. கமலை ரஜினியோ, ரஜினியை கமலோ எந்த இடத்திலும் விட்டுத் தர மாட்டார்கள்.

- Advertisement -

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசனின் கனவு படம் மருதநாயகம். இங்கிலாந்து ராணி எலிசபெத் ராணியை வரவழைத்து அந்த படத்தின் துவக்க விழாவை நடத்தினார் நடிகர் கமல்ஹாசன். ஆனால் 25 சதவீத படப்பிடிப்பு மட்டுமே நடத்தப்பட்ட நிலையில், பொருளாதார காரணங்களால் கமல் அந்த படத்தை தொடர்ந்து எடுக்க முடியவில்லை. ஆனால் வேறு ஹீரோவை வைத்தாவது அந்த படத்தை விரைவில் இயக்குவேன் என கமல்ஹாசன் கூறி வருகிறார்.

மருதநாயகம் படம் எடுக்கப்பட்ட காலகட்டத்தில், கமல்ஹாசனின் கனவு படத்தில் தானும் இருக்க வேண்டும் என்று மிகவும் ஆசைப்பட்டுள்ளார் நடிகர் ரஜினிகாந்த். அதனால் மருதநாயகம் படத்தில் தனக்கும் ஒரு கேரக்டர் வேண்டும் என கமல்ஹாசனிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால் எல்லா முக்கிய கேரக்டர்களுக்கும் கமல் நடிகர்களை கமிட் செய்துவிட்டதால், கடைசியில் ரஜினியால் அந்த படத்தில் நடிக்க முடியவில்லை. இந்த படத்தில் நடிக்க எனக்கு சம்பளம் கூட வேண்டாம் என்றும் ரஜினி கூறியிருக்கிறார். ஆனால் கமல் நோ என்ற ஒரே வார்த்தையில் பதில் சொல்லிவிட்டார்.

- Advertisement -

சற்று முன்