- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் அஜீத்குமார் மருத்துவமனையில் ‘அட்மிட்’ ஆக இந்த பிரச்னைதான் காரணம், வெளியானது அந்த ரகசியம் -...

நடிகர் அஜீத்குமார் மருத்துவமனையில் ‘அட்மிட்’ ஆக இந்த பிரச்னைதான் காரணம், வெளியானது அந்த ரகசியம் – டிஸ்சார்ஜ் ஆவது எப்போது?

- Advertisement -

நடிகர் அஜீத்குமார் இன்று காலை அப்பல்லோ மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்ட சம்பவம், அவரது ரசிகர்களிடையே பலத்த பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அஜர் பைஜானில் ஷூட்டிங் ரத்தான நிலையில், வீட்டில் ஓய்வெடுத்து வரும் அஜீத்குமார் திடீரென, மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டது அவரது ரசிகர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது.

வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக நடிகர் அஜீத்குமார் அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக சொன்னாலும், அவர் அட்மிட் செய்யப்ட்டு அவருக்கு பலவிதமான மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது. பரிசோதனைகள் அனைத்துமே முழுமையாக நடத்தப்பட வேண்டும் என்பதால் அட்மிட் செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. வழக்கமான பரிசோதனைகள் என்றால், சில மணி நேரங்களில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு இருப்பார்.

- Advertisement -

நடிகர் விஜய், நடிகர் அஜீத்குமார் இருவருமே வழக்கமாக சில ஆண்டுகள் தான் வயதில் வித்யாசம் உள்ளவர்கள். ஆனால் நடிகர் விஜய் எப்போதும் ஒரே மாதிரியான உடல் தோற்றத்தில் ஸ்லிம் ஆக இருக்கிறார். உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி, தூக்கம் போன்றவற்றில் ஆரம்பத்தில் இருந்தே அதிக கவனம் செலுத்துகிறார். அதனால் எப்போதும் ஒரே உடல் எடையை பராமரித்து வருகிறார்.

ஆனால் அஜீத்குமார் பெரும்பாலும் உணவு கட்டுப்பாட்டை பின்பற்றுவதில்லை. உடற்பயிற்சிகளில் அதிக ஆர்வம் காட்டுவதாகவும் தெரியவில்லை. எப்போதும் பைக்கில் டூர் செல்வது, வெளியிடங்களுக்கு சுற்றுலா செல்வதில்தான் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். உடல் நலனில் தீவிர கவனம் செலுத்தாதவராக தான் இதுவரை இருந்து வந்திருக்கிறார்.

- Advertisement -

ஆனால் விடாமுயற்சி படப்பிடிப்பு துவங்கிய சில வாரங்களில் அந்த படத்தின் கலை இயக்குநர் மிலன் திடீரென மாரடைப்பால் காலமானார். அஜீத்குமாரின் மிக நெருங்கிய நண்பரான மிலன் மறைவு அஜீத்குமாரை மிகவும் நிலைகுலைய செய்திருக்கிறது. அன்று முதல் தனது உடல் நலனில், ஆரோக்கியத்தில் அதிக அக்கறை காட்ட துவங்கியிருக்கிறார் நடிகர் அஜீத்குமார்.

இந்நிலையில் இன்று காலை சற்று உடல்நலம் சரியில்லாதது போல, உடல் சோர்வு ஏற்பட்ட நிலையில் உடனடியாக அப்பல்லோ மருத்துவமனையில் அட்மிட் செய்யபப்ட்டு இருக்கிறார். மேலும், தனக்கு இதயம் சார்ந்த அனைத்து பரிசோதனைகளையும் செய்யுமாறு, அஜீத்குமார் டாக்டர்களிடம் தெரிவித்துள்ளார். மருத்துவ பரிசோதனைகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், நாளை அஜீத்குமார் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட இருக்கிறார் எனத் தெரிய வந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்