- Advertisement -
Homeபொழுதுபோக்குசூரியவம்சம் 2ம் பாகத்தில் சின்ன சரத்குமாரா நடிக்கப் போறது இவரது மகனா? - இது உருட்டு...

சூரியவம்சம் 2ம் பாகத்தில் சின்ன சரத்குமாரா நடிக்கப் போறது இவரது மகனா? – இது உருட்டு இல்லே, நடிகரே நேரடியாக சொன்ன பதில்தான் இது!

- Advertisement -

நடிகர் சரத்குமார் நடிப்பில், 1990களில் வெளியான படம் சூரிய வம்சம். இந்த படம் மிகப்பெரிய அளவில் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இதில் சரத்குமார் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். அப்பா சரத்குமாருக்கு ராதிகாவும், மகன் சரத்குமாருக்கு தேவயானியும் மனைவியாக நடித்திருந்தனர்.

இயக்குநர் விக்ரமன் இயக்கிய முக்கிய வெற்றிப் படங்களில் சூரிய வம்சம் மிக முக்கியமான படமாக அமைந்தது. இந்த படத்தில் ஜெய் கணேஷ், சத்யப்பிரியா, மணிவண்ணன், நிழல்கள் ரவி, பிரியாமணி, சிந்து, ஆர் சுந்தர்ராஜன், ஆனந்தராஜ் என பல நட்சத்திர நடிகர்கள் நடித்திருந்தனர். ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ பாடல், அப்போது பெரிய ஹிட் பாடலாக வரவேற்கப்பட்டது.

இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சியில், இட்லியை உதிர்த்து போட்டு தேவயானி, இட்லி உப்புமா செய்திருப்பார். இந்த காட்சி மூலம், அப்போது இட்லி உப்புமா, ரசிகர்கள் மத்தியில் பேமஸ் ஆக பேசப்பட்டது. அதே போல் இந்த படத்தில் இடம்பெற்ற மணிவண்ணன் காமெடி காட்சிகளும் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது.

கடந்த 1990களில் ஹிட் ஆன பல படங்கள் இப்போது 2ம் பாகமாக உருவாக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சூரிய வம்சம் படமும் 2ம் பாகமாக எடுக்கப்பட உள்ளதாக தகவல் பரவி வருகிறது. இதுகுறித்து சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய அந்த படத்தில் நாயகன் சரத்குமார் இதுபற்றி கூறியிருக்கிறார்.

அப்படி என்றால் சூரியவம்சம் 2ம் பாகம் படத்தில், சின்ன சரத்குமாரா உங்கள் மகன் ராகுல் சரத்குமார் நடிப்பாரா என கேள்வி எழுப்பப்பட்டது. ஏனெனில் சரத்குமாரின் மனைவி ராதிகா நடித்து வருகிறார். சரத்குமாரின் முதல் மனைவி சாயாதேவியும், பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் நடித்திருக்கிறார். வரலட்சுமி சரத்குமாரும் நடித்து வருகிறார்.

அதனால் சரத்குமார் – ராதிகா மகன் ராகுல் நடிக்க வருகிறாரா, அதுவும் சூரியவம்சம் 2 படத்தில் நடிக்கிறாரா என்ற கேள்வி, சரத்குமாரிடம் அந்த நிகழ்ச்சியில் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சரத்குமார், இல்லை அவருக்கு சினிமாவில் ஆர்வம் இல்லை. கால் பந்து விளையாட்டில்தான் ஆர்வம் அதிகமாக உள்ளது, என்று கூறியிருக்கிறார். இதன்மூலம் தனது மகன் ராகுல் தனது சினிமா வாரிசாக வரமாட்டார் என கூறியிருக்கிறார் நடிகர் சரத்குமார்.

சற்று முன்