- Advertisement -
Homeபொழுதுபோக்குசிவகார்த்திகேயன் உடனான படமே இன்னும் தொடங்கல... அதுக்குள்ளேயும் இந்தியாவின் டாப் நடிகருடன் கைகோர்த்த முருகதாஸ்... இயக்குனர்...

சிவகார்த்திகேயன் உடனான படமே இன்னும் தொடங்கல… அதுக்குள்ளேயும் இந்தியாவின் டாப் நடிகருடன் கைகோர்த்த முருகதாஸ்… இயக்குனர் வச்ச குறி தப்பாது போல…

- Advertisement -

தீனா திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஏ.ஆர். முருகதாஸ். தொடர்ந்து, ரமணா, கஜினி, ஏழாம் அறிவு, துப்பாக்கி, கத்தி உள்ளிட்ட வெற்றி திரைப்படங்களை இயக்கினார் முருகதாஸ். மேலும் பாலிவுட் உலகுக்கும் சென்று தனது இருப்பை காட்டினார்.

ஆனால் கடைசியாக அவர் இயக்கத்தின் வெளிவந்த எந்த திரைப்படங்களும் மிகப்பெரிய அளவில் பேசப்படவில்லை. மகேஷ் பாபுவை வைத்து அவர் எடுத்த ஸ்பைடர் திரைப்படம் தோல்வி அடைந்தது. இதேபோல் விஜய்யை வைத்து இயக்கிய சர்க்கார் படமும் வெற்றி பெறவில்லை.

அடுத்ததாக ரஜினியை வைத்து அவர் எடுத்த தர்பார் திரைப்படமும் தோல்வி அடைந்தது. இப்படி தொடர்ந்து மூன்று படங்கள் முருகதாஸிற்கு பெரிய அடியை கொடுத்ததால், அடுத்த திரைப்படம் குறித்து அறிவிப்பை வெளியிடாமலேயே இருந்தார். இந்த நிலையில் விஜயுடன் அவர் நான்காவது முறையாக இணைவதாக தகவல் வெளியானது.

கிட்டத்தட்ட இது உறுதியும் செய்யப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் ப்ராஜெக்ட்டில் இருந்து விஜய் விலகினார். கதையில் அவருக்கு திருப்தி இல்லை என்பதால் இந்த முடிவை தளபதி எடுத்ததாக கூறப்படுகிறது. இதன் பிறகு, ஏ ஆர் முருகதாஸ் தரப்பில் இருந்தும் அடுத்த கட்ட அறிவிப்பு பற்றி வெளியாகாமல் இருந்தது.

இப்படியான சூழலில் தான் சிவகார்த்திகேயனை வைத்து இயக்கத் தயாராகி வருகிறார், ஏ ஆர் முருகதாஸ். தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ லக்ஷ்மி மூவிஸ் நிறுவனம் இதனை தயாரிக்கிறது. அனிருத் திரைப்படத்திற்கு இசையமைக்க, ருக்மணி படத்தில் நடிக்கிறார்.

சிவகார்த்திகேயன் தற்போது அமரன் திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில், ஜூன் அல்லது ஜூலை மாதம் ஏ ஆர் முருகதாஸ் உடனான திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படத்திற்குப் பிறகு மீண்டும் பாலிவுட் செல்கிறார் ஏ ஆர் முருகதாஸ். இந்த முறையை சல்மான் கானை வைத்து அவர் படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அவர் கூறிய கதையை சல்மான் கானுக்கு பிடித்துப் போனதால், விரைவில் திரைப்படம் டேக் ஆஃப் ஆகிறது. அனேகமாக 2025 ஆம் ஆண்டு ரம்ஜானில் இந்த திரைப்படத்தை வெளியிட ஏ ஆர் முருகதாஸ் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

சற்று முன்