- Advertisement -
Homeபொழுதுபோக்குதிடீர் அரசியல் பிரவேசத்துக்கு பின்னணியில் இப்படி ஒரு காரணமா? - கில்லி மாதிரி சொல்லி...

திடீர் அரசியல் பிரவேசத்துக்கு பின்னணியில் இப்படி ஒரு காரணமா? – கில்லி மாதிரி சொல்லி அடிக்க அரசியல் களத்தில் குதித்த விஜய்

- Advertisement -

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்ததை ஒரு தரப்பினர் வரவேற்றாலும் ஒரு தரப்பினர் விமர்சிக்கவே செய்கின்றனர். குறிப்பாக அதிமுக, திமுக உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகள், நடிகர்கள் அரசியலுக்கு வருவது எல்லாம் வழக்கமான ஒன்றுதான். அரசியலில் இதெல்லாம் சாதாரணப்பா என்று கவுண்டமணி போல கூறினாலும், உள்ளூர அதிருப்தியில்தான் இருக்கின்றனர்.

திமுக சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. விண்ணை முட்டும் அளவுக்கு உணவு பொருட்கள், அத்யாவசிய பொருட்கள் விலை உயர்ந்தும் அவற்றை கட்டுப்படுத்தவில்லை. எதற்கெடுத்தாலும் கருணாநிதி பெயரை வைப்பதுதான் ஸ்டாலின் அரசின் சாதனை என்று அதிமுகவினர், திமுக மீது குறை சொல்லி வருகின்றனர். இதைச் சொல்லியே 2026 சட்டசபை தேர்தலில் அதிக தொகுதிகளை பிடித்து ஜெயித்துவிடலாம் என்பது அதிமுகவின் கணக்கு.

- Advertisement -

ஆளுங்கட்சி செல்வாக்கு, வழக்கமான திமுக ஓட்டுவங்கி, இலவச மகளிர் பயண திட்டம், மகளிர் உரிமைத்தொகை, அரசின் புதிய திட்டங்கள் போன்றவற்றை பேசி மீண்டும் ஆட்சியை பிடித்து விடலாம் என்ற ஒரு கணக்கில் திமுகவின் அரசியல் பயணம் இருந்து வருகிறது. இதையெல்லாம் விட ஓட்டுக்கு பணம் என்றால், மக்களை வீழ்த்தி திமுக பக்கம் சாய்த்துவிடலாம் என்ற தைரியமும் திமுகவுக்கு இருக்கிறது.

இந்த சூழலில், நடிகர் விஜய் அரசியல் களத்தில் குதித்திருப்பது அதிமுக, திமுகவினர் மத்தியில் அதிருப்தியை, வெறுப்பை ஏற்படுத்தியிருக்கிறது. திடீரென இப்படி ஒரு இடையூறை இர்ண்டு தரப்பினருமே எதிர்பார்க்கவில்லை. அதுவும் விஜய்க்கு, தமிழ்நாட்டில் உள்ள மாஸ் அறிந்துள்ள இரு கட்சிகளுமே சற்று கலங்கிதான் போயுள்ளனர். சினிமாவில் ஹீரோவாக இருந்தவர், தமிழக அரசியலில் இரண்டு திராவிட கட்சிகளுக்கு இப்படி வில்லனாக எதிரில் நிற்கிறாரே என்றுதான் வெறுப்படைகின்றனர்.

- Advertisement -

ஆனால் விஜய், தமிழக அரசியல் சூழலை கணித்துதான் அரசியல் களத்தில் குதித்துள்ளார். ஏனென்றால் எடப்பாடி பழனிசாமியோ, ஸ்டாலினோ மிகப்பெரிய ஆளுமை கிடையாது. அவர்கள் தேர்தலில் நின்றால் அந்த கட்சிக்காரர்கள் ஆர்வமாக ஓட்டுப்போட வருகிறார்களே தவிர, நடுநிலையாளரக்ள் மத்தியில் இருவருக்குமே ஓட்டுப்போட விரும்புவதில்லை. அதனால் ஓட்டு சதவீதம் கணிசமாக குறைகிறது. நோட்டா ஓட்டுகள் அதிகமாக வருகிறது.

மத்தியில் உள்ள பாஜக, காங்கிரஸ் கட்சிகள் மீதும் மக்களுக்கு அபார நம்பிக்கை இல்லை. மக்கள் நலன் சார்ந்த கட்சிகளாக இருந்த கம்யூனிஸ்ட் கட்சிகளும், தேர்தல் நேர கூட்டணி சார்ந்த கட்சிகளாக மாறிப்போய்விட்டன. எனவே, தமிழக அரசியலை பொருத்த வரை மாற்றம் என்பது வேண்டும். மாறி மாறி திமுக, அதிமுக ஆட்சி செய்து ஊழல், லஞ்சம் அதிகரித்தது மட்டும்தான் மிச்சம். மக்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் இல்லை என மக்கள் சிந்திக்க துவங்கிய நேரத்தில், இந்த பின்னணியை தெளிவாக புரிந்துக்கொண்டு, சொல்லியடித்த கில்லியாக அரசியலுக்கு வந்திருக்கிறார் விஜய்.

- Advertisement -

சற்று முன்