- Advertisement -
Homeபொழுதுபோக்குபாலிவுட் நடிகருக்கு நோ சொன்ன திரிஷா, விஜய் என்றவுடன் உடனே ஓகே சொன்னதன் பின்னணி ...

பாலிவுட் நடிகருக்கு நோ சொன்ன திரிஷா, விஜய் என்றவுடன் உடனே ஓகே சொன்னதன் பின்னணி – அந்த கொள்கை எல்லாம் காத்துல பறந்துடுச்சா?

- Advertisement -

நடிகர் விஜய், தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்று சமீபத்தில் கூறப்பட்டது பெரிய சர்ச்சையை கிளப்பியது. ஏனெனில் 45 ஆண்டுகளாக சூப்பர் ஸ்டாராக ரஜினிகாந்த் இருந்து வருகிறார். யார் தனது படங்கள் மூலம் அதிக வசூலை தருகிறார்களோ, யார் அதிக சம்பளம் பெறுகிறார்களோ, அவர்கள்தானே சூப்பர் ஸ்டார். அதனால் ரஜினியை விட அந்த விஷயங்களில் முன்னணியில் இருக்கும் விஜய் தான் சூப்பர் ஸ்டார் என அவரது ரசிகர்கள் வாதம் செய்தனர்.

ஆனால் சீனியர் நடிகர் ரஜினிகாந்த் இடத்தில் விஜய் என்பது அவமரியாதை செய்கிற விஷயமாகி மாறிவிடும் என்பதால், இந்த பிரச்னைக்கு விஜயே, லியோ பட விழாவில் முற்றுப்புள்ளி வைத்தார். சூப்பர் ஸ்டார் என்றால், அவர் ஒருவர்தான். நான் தளபதியாக மட்டுமே இருந்து உங்கள் ஆணைகளை நிறைவேற்றுகிறேன் என, அரசியலுக்கு வருவதை அப்போதே சூசகமாக சொல்லி விட்டார்.

- Advertisement -

இப்போது தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவராகவும் அரசியல் களத்தில் குதித்துவிட்டார். அதனால் விஜய் என்றாலே மாஸ்தான் என்பதில் எந்த மாறுபட்ட கருத்தும் தமிழ் சினிமாவில் இருக்கவே முடியாது. இப்போது விஜய் அரசியலுக்கு சென்றாலும், அவ்வப்போது படங்களில் நடியுங்கள். ரசிகர்கள் மிகவும் ஏங்கிப் போவார்கள். அதுவும் இளம் வயது ரசிகர்கள் உங்கள் படங்களை பார்க்க தவம் இருக்கின்றனர் என திரை பிரபலங்கள் பலரும் விஜய்க்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இப்போது விஜய் நடிப்பில் த கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படம், இறுதிக்கட்ட படப்பிடிப்பை நோக்கி போய்க்கொண்டு இருக்கிறது. இந்த மாத இறுதிக்குள் படப்பிடிப்பை நிறைவு செய்ய இயக்குனர் வெங்கட்பிரபு திட்டமிட்டுள்ளார். இதற்காக சில தினங்களுக்கு முன், பிரசாத் ஸ்டுடியோவில் பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டுள்ளது. குண்டூர்காரம் படம் டான்ஸ்மாஸ்டர் சேகர் கோடியோகிராபில் இந்த சிறப்பு பாடலில் விஜயுடன் நடனமாடியவர் நடிகை திரிஷா.

- Advertisement -

நடிகைககள் நயன்தாரா, சமந்தா போன்றவர்களே ஐட்டம் பாடல்களுக்கு குத்தாட்டம் போட்டு வந்த நிலையில், இந்த குத்தாட்டம் போட, திரிஷா ஒரு போதும் ஒத்துக்கொண்டதில்லை. சில ஆண்டுகளுக்கு பட வாய்ப்புகள் இல்லாமல், வீட்டில் சும்மா இருந்த போது கூட. குத்தாட்டம் போட வந்த வாய்ப்புகளை நிராகரித்தவர். சமீபத்தில் ஜவான் படத்தில், ஷாருக்கானுடன் ஐட்டம் பாட்டுக்கு ஆட மறுத்தவர்தான் திரிஷா. பணத்துக்காக, ஒரு பாட்டுக்காக எல்லாம் ஆட மாட்டேன் என கொள்கை கொண்டவராக இருந்தவர்.

ஆனால் விஜய் படத்தில், விஜயுடன் குத்தாட்டம் என்றவுடன் உடனடியாக ஓகே சொன்னவர், ஆட்டம் போடவும் வந்திருக்கிறார். விஜயுடன் நடனம் என்றால், சம்பளம் கூட தர வேண்டாம். சும்மாவே ஆடுவேன் என்றும் திரிஷா கூறியதாக தகவல் பரவி வருகிறது. அப்படி என்றால், தவெக கட்சியின் மாநில மகளிரணி தலைவி போஸ்ட் அவருக்குதானா? என பலரும் சமூகவலைதளங்களில் கிண்டல் செய்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்