- Advertisement -
Homeபொழுதுபோக்குஇயக்குனர் முத்தையா மகன் நடித்த புதிய படத்துக்கு இப்படி ஒரு டைட்டிலா? அந்த நடிகர்கள்...

இயக்குனர் முத்தையா மகன் நடித்த புதிய படத்துக்கு இப்படி ஒரு டைட்டிலா? அந்த நடிகர்கள் கோவிச்சுக்க மாட்டாங்களா? – அட மகனை அடுத்து அப்பாவும் ஹீரோ ஆயிட்டாரா – என்ன நடக்குது இங்கே?

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் முத்தையா. இவர் குட்டிப்புலி, கொம்பன், மருது, கொடிவீரன், தேவராட்டம், புலிக்குத்தி பாண்டி, விருமன், காதர் பாட்ஷா என்கிற முத்துராமலிங்கம் உள்ளிட்ட படங்களை இயக்கியவர். இவரது படங்களில் கார்த்தி, சசிக்குமார், விஷால், ஆர்யா, கௌதம் கார்த்திக், விக்ரம் பிரபு உள்ளிட்டோர் நாயகன்களாக நடித்திருந்தனர்.

முத்தையா இயக்கிய படங்கள் என்றாலே அது சாதியம் பேசும் படங்களாக தான் இருக்கும். அதாவது தென் மாவட்டங்களில் குறிப்பிட்ட சாதி மக்களுக்கான முக்கிய அம்சத்தை உள்ளடக்கிய ஜாதி படங்களையே முத்தையா தொடர்ந்து இயக்கி வருகிறார். அதனால் இவரது படங்கள் என்றாலே அது ஒரு தரப்பு மக்களை உயர்த்தி பிடிக்கும் விதமான விஷயத்தை முக்கிய அம்சமாக கொண்டிருக்கும்.

- Advertisement -

இயக்குனர் முத்தையா இயக்கிய குட்டிப்புலி, கொம்பன், மருது, தேவராட்டம் படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றியைப் பெற்றன. ஆனால் புலிக்குத்தி பாண்டி, காதர் பாட்ஷா என்கிற முத்துராமலிங்கம் படங்கள் படுதோல்வி அடைந்தன. அதனால் சமீபமாக முத்தையா இயக்கும் படங்களில் நடிக்க நடிகர்கள் யாரும் முன் வரவில்லை.

இதனால் ஒரு கட்டத்தில் தன் மகனையே அவர் ஹீரோவாக நடிக்க வைத்து படம் இயக்கினார். இந்த படத்துக்கு அவர் சுள்ளான் சேது என பெயர் வைத்துள்ளார். சுள்ளான் என்பது பல ஆண்டுகளுக்கு முன் நடிகர் தனுஷ் நடித்த படமாகும். சேது என்பது இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகர் சியான் விக்ரம் நடித்த மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படமாகும்.

- Advertisement -

நடிகர்கள் தனுஷ் மற்றும் சியான் விக்ரம் நடித்த படங்களின் பெயரை தன் மகனின் படத்துக்கு முத்தையா டைட்டிலாக வைத்திருப்பது தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் சுள்ளான் சேது படம் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ் க்கு தயாராக உள்ள நிலையில், இன்னும் இந்த படம் வியாபாரம் ஆகாமல் ரிலீஸ் தேதி தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறது.

இதற்கிடையே அருள்நிதி நடிக்கும் ஒரு படத்தை முத்தையா இயக்க கமிட்டாகி இருக்கிறார். வழக்கமான அவரது ஜாதிய பின்னணி இல்லாமல் இந்த படம் வித்தியாசமான கதைக்களத்தில் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தை தொடர்ந்து முத்தையா ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். அந்த படத்தை தயாரிப்பதும் அவர்தான். முத்தையாவின் மகன் நடித்த படமே இன்னும் திரைக்கு வரவில்லை, அந்த படம் வெற்றி பெறுமா என்று தெரியவில்லை. இந்த சூழ்நிலையில் அப்பாவும் ஹீரோவாக நடிக்க வந்து விட்டாரா என்று ரசிகர்கள் கிண்டல் செய்கின்றனர்.

- Advertisement -

சற்று முன்