- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜயை பார்த்து காப்பியடித்த அஜீத், அட இதுல கூட சொந்தமாக யோசிக்க மாட்டாங்களா? - தமிழ்...

விஜயை பார்த்து காப்பியடித்த அஜீத், அட இதுல கூட சொந்தமாக யோசிக்க மாட்டாங்களா? – தமிழ் சினிமா தலையெழுத்தையே மாத்திடுவாங்க போல!

- Advertisement -

நடிகர் விஜய், நடிகர் அஜீத் படங்கள்தான் இப்போது போட்டி களத்தில் நிற்கின்றன. கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாகவே தமிழ் சினிமாவில் ஆடுகளம் சண்டை கோழிகளை போல, விஜய் – அஜீத்குமார்தான் சினிமா போட்டியாளர்கள். அதற்கு முன்பு ரஜினி – கமல் இருந்தார்கள். அதற்கு முன்பு எம்ஜிஆர் – சிவாஜி இருந்தார்கள். இப்படித்தான் 2 நடிகர்களை போட்டியாளர்களை வைத்து தமிழ் சினிமா காலம் தள்ளுகிறது.

ஆனால் இன்னும் ஒரு படத்தில் மட்டுமே நடிப்பேன் எனக் கூறிய விஜய், இப்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் த கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் அதாவது கோட் படத்தில் நடித்து வருகிறார். அதன்பிறகு விஜய் 69 படத்தில் நடிக்கிறார். அதன்பிறகு விஜய் முழுநேர அரசியலில் ஈடுபட இருக்கிறார். இதையடுத்து அஜீத்குமாருக்கு போட்டி நடிகர் யார் என்பதில் மிகப்பெரிய குழப்பம் ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் மற்றொரு புதிய சம்பவத்தை தமிழ் சினிமாவில் துவக்கி வைத்துள்ளனர். அதாவது, தமிழ் படங்களுக்கு தமிழில்தான் பெயர் வைக்க வேண்டும் என்பதுதான் விதிமுறை. ஏனெனில் படம் பார்க்கும் மக்கள் தமிழர்கள். படம் திரையிடப் போவதும் தமிழ்நாட்டில்தான். படத்தில் நடிப்பவர்களும், தமிழகத்தில்தான் வாழ்பவர்கள்தான்.

இப்படிப்பட்ட சூழலில், விஜய் நடித்த படத்துக்கு த கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் என ஆங்கில பெயர் வைக்கப்பட்டு, அதை சுருக்கமாக கோட் என அழைக்கின்றனர். கோட் என்றால் ஆங்கிலத்தில் வெள்ளாடு. அப்படி என்றால் இந்த படத்தின் வாயிலாக, அரசியல் வாழ்க்கையில் விஜய் நுழைந்துள்ளதால் அப்போது அவர் ஆடுதான் என்று மற்ற அரசியல் கட்சிகள் கிண்டலடிக்கின்றன.

- Advertisement -

இப்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் அஜீத்குமாரின் 63வது படம் குறித்து அறிவிப்பு 2 தினங்களுக்கு முன்பு வெளியானது. இந்த படத்துக்கு வைக்கப்பட்டுள்ள பெயர் குட் அண்ட் பேட் அக்லி என்பதாகும். இதுவும் ஆங்கில தலைப்பு படம்தான். விஜய் படத்துக்கு ஆங்கில தலைப்பு வைத்ததால் அதை அப்படியே அஜீத்குமார் படத்துக்கும் காப்பி அடித்துள்ளனர். இதில் டைட்டில் டிசைன் மிக கேவலமாக இருப்பதாக நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

அதுமட்டுமின்றி இதே பெயரில் ஏற்கனவே ஹாலிவுட் படம் ஒன்றும், மலையாள படம் ஒன்றும் வெளிவந்துள்ளதாம். இப்போது 3வது முறையாக இந்த பெயரை அஜீத் படத்துக்கு தலைப்பாக சூட்டியுள்ளனர். இனி கதையும் அந்த ஹாலிவுட் படத்தின் தழுவலா என்பது வரும் நாட்களில் தெரிந்துவிடும். இப்படி படம் டைட்டிலை கூட சொந்தமாக யோசிக்காத, ஆங்கில தலைப்பை சுட்டு வைக்கும் நிலையில், போகிற போக்கை பார்த்தால், இந்த இயக்குநர்களும், நடிகர்களும் தமிழ் சினிமா தலையெழுத்தையே மாற்றாமல் விடமாட்டார்கள் என்பது மட்டும் தெளிவாகிறது.

- Advertisement -

சற்று முன்