நடிகர் விஜய் இப்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கிறார். அதுவும் டாப் ஸ்டார் நடிகர்களில் உச்சத்தில் இருக்கிறார். இப்போதைய நிலவரப்படி ரூ. 200 கோடி சம்பளம் வாங்கும் ஒரே தமிழ் நடிகர் நடிகர் விஜய் மட்டுமே. நடிகர் ரஜினிகாந்த் கூட இன்னும் 140 கோடி ரூபாய்தான் ஒரு படத்துக்கு சம்பளம் வாங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி டாப் நடிகராக உள்ள விஜய், கடந்த மாதம் துவக்கத்தில் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை துவங்குவதாக அறிவித்தார். இப்போது நடித்து வரும் த கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படத்தின் ஷூட்டிங் இந்த மாதத்துடன் முடிவடையும் நிலையில், அடுத்த மாதம் கட்சியின் மாநில மாநாட்டை மதுரையில் நடத்த திட்டமிட்டு இருக்கிறார். அவர் தனது 69வது படத்தில் மட்டுமே நடிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய். ஆனால் விஜயை போல நடிகர் ஆக விரும்பாமல் அவரது தாத்தா எஸ்ஏ சந்திரசேகர் போல, இயக்குநராக துவக்கத்தில் இருந்தே ஆர்வம் காட்டினார். இதற்காக வெளிநாட்டில் டைரக்ஷன் தொடர்பாக படிப்பை முடித்த ஜேசன் சஞ்சய், குறும்படங்களை இயக்கி இருக்கிறார்.
இந்நிலையில் லைகா புரடக்சன் தயாரிப்பில் ஜேசன் சஞ்சய் இயக்கும் படம் விரைவில் தயாராக இருக்கிறது. இந்த படத்தில் முதலில் அதர்வா அல்லது கவின் கதாநாயகனாக நடிப்பார்கள் என கூறப்பட்டது. அதன்பிறகு துருவ் விகரம் நாயகன், அதிதி ஷங்கர் கதாநாயகி என்றும் கூறப்பட்டது. ஆனால் அவர்கள் இருவருமே இந்த படத்தில் நடிக்கவில்லை என்பது உறுதியாகி உள்ளது.
இதற்கிடையே தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய், நடிகர் சிவகார்த்திகேயனை சந்தித்து தனது படத்தின் கதையை கூறியுள்ளார். கதையை கேட்ட சிவகார்த்திகேயன், இந்த கதை எனக்கானது அல்ல. எனக்கான எலிமென்ட்ஸ் படத்தில் இருந்தால்தான் ரசிகர்களுக்கு பிடிக்கும். அது எதுவுமே இந்த கதையில் இல்லாததால், இது எனக்கு செட் ஆகாது என மறுத்திருக்கிறார்.
விஜய் மகன் சஞ்சய் ஜேசன் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க மறுத்ததற்கு காரணம், ஏற்கனவே அடுத்த தளபதி என்ற கோணத்தில் செல்வதாக, ஒரு புகார் நீடிக்கிறது. அதே நேரத்தில் அப்பாவின் ஆசிர்வாதம் இல்லாமல் இயக்குனராக அவதாரம் எடுத்தவர் விஜய் மகன் சஞ்சய். இந்த பஞ்சாயத்தில் நாம் ஹீரோவாக நடித்தால் விஜய் மற்றும் விஜய் ரசிகர்களின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும் போன்ற காரணங்களால், விஜய் மகனுக்கு சிவகார்த்திகேயன் நோ சொன்னதாக தெரிய வந்துள்ளது.





