தமிழ் சினிமாவில் காமெடியில் தனக்கென ஒரு சாம்ராஜ்யமே நடத்திக் காட்டியவர் வைகைப்புயல் வடிவேலு. குறிப்பாக கடந்த 1990 முதல் 2010ம் ஆண்டு வரை காமெடி நடிப்பில் தனக்கென ஒரு தனிமுத்திரையை பதித்தவர். ஒரு நாள் கால்ஷீட்டுக்கு ரூ. 12 லட்சம் முதல் ரூ. 15 லட்சம் வரை சம்பளமாக வாங்கியவர்.
ஆனால் ஒரு கட்டத்துக்கு பிறகு நடிகர் வடிவேலுவின் சில நடவடிக்கைகளால் அவர் மீது கடும் விமர்சனங்களும் சர்ச்சைகளும் எழுந்தது. குறிப்பாக கேப்டன் விஜயகாந்த் குறித்து அவர் பேசியது, இயக்குனர் ஷங்கருடன் மோதல் என சில பிரச்னைகளில் சிக்கிய அவர் 10 ஆண்டுகளாக சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார்.
இப்போது மீண்டும் படங்களில் நடிகர் வடிவேலு நடித்து வருகிறார். எனினும் முன்பு இருந்த வரவேற்பும் ஆதரவும் இப்போது ரசிகர்களிடம் வடிவேலுவுக்கு இல்லை. குணச்சித்திர வேடங்களிலும் நடிக்கிறார். அதே நேரத்தில் அவருடன் நடித்த பல காமெடி நடிகர்கள் வடிவேலு குறித்தும் அவரது கெட்ட குணங்கள் குறித்தும் பேசி வருவதும் குறிப்பிடத்தக்கது.
நடிகர் வடிவேலுவின் மகள் திருமணம் சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. அவரது குடும்பத்தில் நடக்கும் முதல் திருமணம் என்பதால் ரஜினி கமல் போன்ற பிரபல நடிகர்களை திருமணத்துக்கு அழைக்கலாம் என்று உறவினர்கள் கூறியிருக்கின்றனர். ஆனால் வடிவேலு, அதெல்லாம் வேண்டாம். நான் கூப்பிட்டால் அவர்கள் எல்லாம் கண்டிப்பாக வருவாங்க.
ஆனால் அவர்களுக்கு ரூம் போட்டு உபசரிக்கும் செலவை யார் செய்யறது? அதனால் எந்த நடிகர்களும் வர வேண்டாம். நான் அவர்களை கூப்பிட மாட்டேன் என்று கறாராக கூறியிருக்கிறார். அதனால் இந்த திருமணத்திற்கு வடிவேலுவின் உறவினர்கள் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளனர். திருமணத்தில் 2000 பேருக்கு சாப்பாடு சொல்லி இருந்த நிலையில் அதை போல் சமையல்காரரும் அதிகமாக 400 பேர் வரை கூடுதலாக கணக்கு போட்டு சமைத்திருக்கிறார்.
மொத்த சாப்பாடு முடிய போகிறது என்ற நிலைமையில், திருமணத்துக்கு வந்த வடிவேலுவின் ரசிகர்கள் 1500 பேர் சாப்பிட ரெடியாக காத்திருக்கின்றனர். அது குறித்து வடிவேல்விடம் கேட்க, என்னால் சொன்ன அளவுக்கு மேல் காசு எல்லாம் தர முடியாது என்று மறுத்திருக்கிறார். அப்போது எலி படத்தின் தயாரிப்பாளர், நீங்க அவங்களுக்கு சமைச்சு போடுங்க. அந்த 1500 பேருக்கு நான் காசு தரேன் என்று சொன்ன பிறகே ரசிகர்களுக்கு கல்யாணப் பந்தியில் சாப்பாடு கிடைத்தது என்ற ஒரு தகவல் இணையத்தில் இப்போது வைரலாகி வருகிறது.





