- Advertisement -
Homeபொழுதுபோக்குகோட் படத்தில் விஜயுடன் குத்தாட்டம் போட்டு பட்டைய கௌப்பிய நடிகை திரிஷா - டென்சனில் மூடு...

கோட் படத்தில் விஜயுடன் குத்தாட்டம் போட்டு பட்டைய கௌப்பிய நடிகை திரிஷா – டென்சனில் மூடு அவுட் ஆன டைரக்டர் வெங்கட்பிரபு

- Advertisement -

நடிகை திரிஷா, கடந்த 20 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். இடையில் சில ஆண்டுகள் போதிய வாய்ப்பின்றி இருந்த திரிஷா, மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கேரக்டரில் நடித்தார். முதல் பாகம் , 2ம் பாகம் என இரண்டாக வெளிவந்த இந்த படத்தில் பெரிய பாராட்டை, வரவேற்பை பெற்றவர் நடிகை திரிஷா மட்டுமே.

இதையடுத்து தற்போது திரிஷா தெலுங்கில் சிரஞ்சீவி, வெங்கடேஷ் உள்ளிட்ட 3 பெரிய ஸ்டார் நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார். மலையாளத்தில் முக்கிய இயக்குனர்களின் 2 படங்கள், தமிழில் தக்லைப் மற்றும் விடாமுயற்சி படங்களில் நடித்து வருகிறார். இப்போது விடாமுயற்சி படம் டிராப் செய்யப்பட்ட நிலையில், மற்ற படங்களில் பிஸியாக இருந்து வருகிறார்.

- Advertisement -

இந்நிலையில் சில தினங்களுக்கு முன், பிரசாத் ஸ்டுடியோவில் கோட் படத்துக்காக டான்ஸ் மாஸ்டர் சேகர் கோடியோ கிராப்பில், செமையான குத்தாட்ட நடனம் ஒன்று படமாக்கப்பட்டுள்ளது. இதில் விஜய், திரிஷா உள்ளிட்ட சில முக்கிய நட்சத்திரங்கள் பங்கேற்ற பாடல் காட்சி படமாக்கப்பட்டுள்ளது. படத்தில் சினேகா, மீனாட்சி சவுத்ரி கதாநாயகிகள் என்ற நிலையில், திரிஷா தான் இந்த பாட்டுக்கு செம குத்தாட்டம் போட்டிருக்கிறார். பாடல் காட்சி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெறும் என்று கூறப்படுகிறது.

பொதுவாக நடிகை திரிஷா, அவர் நடிக்கும் படங்களை தவிர மற்ற படங்களில் இதுபோன்ற ஐட்டம் பாடல்களுக்கு குத்தாட்டம் போடுவதில்லை என்பதை கொள்கை முடிவாக வைத்திருக்கிறார். அதனால் அவர் மார்க்கெட் இல்லாமல் வீட்டில் இருந்த போது கூட, இதுபோன்ற குத்தாட்டம் போட தனியாக அழைப்பு வந்தும், பலமடங்கு சம்பளம் தருவதாகவும் கூறியும் முடியாது என ஒற்றை வார்த்தையில் பதில் சொல்லி இருக்கிறார்.

- Advertisement -

ஆனால் அப்படிப்பட்ட நடிகை திரிஷா, விஜய் படத்தில் குத்தாட்டம் என்றவுடன் உடனே டபுள் ஓகே சொல்லி இருக்கிறார். சம்பளம் இல்லை என்றாலும் எனக்கு ஓகே தான் என்றவர், உடனடியாக தேதி ஒதுக்கி தந்து வந்து குத்தாட்டத்தை போட்டுவிட்டுச் சென்றுள்ளார். இந்த பாடல் காட்சியை படமாக்கியவர் படத்தின் டைரக்டர் வெங்கட்பிரபுதான். ஆனால் திரிஷா விஜயுடன் போட்ட குத்தாட்டத்தை பார்த்து, டென்சனாகி பயங்கர அப்செட்டாகி இருக்கிறார் வெங்கட்பிரபு.

ஏனெனில் விஜய் படத்துக்கு முன், வெங்கட்பிரபு ஒரு தெலுங்கு படத்தை இயக்கினார். அந்த படத்தின் கதாநாயகன், பிரபல நாகார்ஜூனா – அமலா நட்சத்திர தம்பதி மகன், நடிகை சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யா தான். ஆனால் நாக சைதன்யாவுடன் ஒரு பாட்டுக்கு ஆட மறுத்த திரிஷா, பலமடங்கு சம்பளம் தருவதாகவும் கூறியும் மறுத்திருக்கிறார். ஆனால் அதே டைரக்டர், ஆனால் ஹீரோ விஜய் என்றவுடன் இப்படி வந்து ஆடுகிறாரே, என ஏகப்பட்ட டென்சனில் இருந்த வெங்கட்பிரபுவை, உதவி இயக்குனர்கள் சமாதானம் செய்துள்ளனர்

- Advertisement -

சற்று முன்