- Advertisement -
Homeபொழுதுபோக்குஇயக்குனர் அட்லி இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜூன் நடிக்கும் பிரமாண்ட படம் - அதில் நடிக்கும்...

இயக்குனர் அட்லி இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜூன் நடிக்கும் பிரமாண்ட படம் – அதில் நடிக்கும் தமிழ் நடிகர்கள் 2 பேர் யார் தெரியுமா? போடு வெடிய!

- Advertisement -

தமிழ் சினிமாவில் இப்போது உச்ச நட்சத்திர இயக்குனராக இருப்பவர் அட்லி. இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணிசெய்த அவர் ராஜா ராணி படம் மூலம் இயக்குனராக மாறினார். ராஜா ராணி படம் பெரிய வரவேற்பை வெற்றியை பெற்றது.

தொடர்ந்து விஜய் நடித்த தெறி மெர்சல் பிகில் ஆகிய படங்களை அட்லி இயக்கினார். இந்த 3 படங்களுமே தொடர் வெற்றிப் படங்களாக இயக்குனர் அட்லிக்கு நட்சத்திர அந்தஸ்தை பெற்றுத் தந்தது. முன்னணி இயக்குனராக மாறிய அவருக்கு பாலிவுட்டில் இருந்து வாய்ப்பு தேடி வந்தது.

- Advertisement -

தமிழில் 4 வெற்றிப் படங்களை இயக்கிய அட்லி, இந்தியில் ஷாருக்கான் நடித்த ஜவான் படத்தை இயக்கினார். அந்த படமும் ரூ. 1150 கோடிக்கு மேல் வசூலித்து பாலிவுட்டில் பெரிய மரியாதையை அவருக்கு ஏற்படுத்தி கொடுத்தது. மும்பையில் உள்ள உலக பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி வீட்டு விசேஷ நிகழ்ச்சியில் பங்கேற்கும் அளவுக்கு அட்லியின் செல்வாக்கு உயர்ந்தது.

இப்போது இந்திய சினிமாவில் ஒரு படத்தை இயக்க ரூ. 100 கோடி சம்பளம் வாங்கும் இயக்குனராக அட்லி மாறியிருக்கிறார். அடுத்ததாக அட்லி இயக்கும் 6வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் ரூ. 700 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கிறது. ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜூன் நடிக்கும் சயின்டிபிக்சன் படமாக இது உருவாகிறது. தீபிகா படுகோன் ராஷ்மிகா மந்தனா ஜான்விகபூர் மிருணாள் தாகூர் உள்பட 5 நாயகிகள் இந்த படத்தில் நடிக்கின்றனர்.

- Advertisement -

இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த 16ம் தேதி மும்பையில் துவங்கி நடந்து வருகிறது. இந்த படத்தில் கோவை சரளா முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் கேமியோ ரோலில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பதாகவும் காமெடி ரோலில் நடிகர் யோகிபாபு நடிப்பதாகவும் லேட்டஸ்ட் தகவல் கிடைத்துள்ளது.

ஏற்கனவே இந்தியில் அட்லி இயக்கிய ஜவான் படத்தில் விஜய் சேதுபதி வில்லன் கேரக்டரில் நடித்திருந்தார். அதே படத்தில் காமெடி ரோலில் யோகிபாபுவும் நடித்திருந்தார். அந்த படத்தின் சென்டிமென்ட் காரணமாக இந்த படத்திலும் யோகிபாபு மற்றும் விஜய் சேதுபதியை இயக்குனர் அட்லி நடிக்க கமிட் செய்திருப்பதாக லேட்டஸ்ட் அப்டேட் கிடைத்துள்ளது.

- Advertisement -

சற்று முன்